கவிதைகள்

மனிதனின் ஆரோக்கியத்தை, அளந்துப் பார்க்க சில எளிய வழிமுறைகள். ஸ்கேன்,எக்ஸ்ரே, லெப் டெஸ்ட், யூரின் டெஸ்ட், மோஷன் டெஸ்ட் எதுவுமே தேவையில்லை. ஆயிரகணக்கில் பணம் செலவழிக்கவும் தேவையில்லை. கீழே குறிப்பிடப் பட்ட ஐந்து விஷயங்களை கவனித்தாலே போதும்.

 1. தரமான பசி
 2. தரமான தாகம்
 3. தரமான உறக்கம்
 4. முழுமையான கழிவு நீக்கம்
 5. மன அமைதி

தரமான பசி

 • உழைப்புக் கேற்ப பசி இருக்கவேண்டும்
 • உழைப்பு குறைவாக இருந்தால் பசியின் அளவும் குறைவாக இருக்க வேண்டும்.
 • 1 நாளைக்கு குறைந்தது 2 வேளை பசி உண்டாக வேண்டும்
 • உட்கொண்ட உணவு சுலபமாக ஜீரணமாக வேண்டும்
 • உணவை உட்கொண்ட பிறகு வயிறு உப்புசம், வயிற்றில் பாரம், அசதி, தூக்கம் உண்டாகக் கூடாது

தரமான தாகம்

 • உழைப்புக்கேற்ற தாகம் இருக்க வேண்டும்
 • அளவான தாகம் உருவாக வேண்டும்.
 • உதடு காய்வது தாகம் அல்ல
 • தாகத்துக்கு வெறும் தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும், புட்டியில் அடைத்த, சுவை, மனம், இரசாயனம் கலந்த நீரை அருந்தக் கூடாது

தரமான உறக்கம்

 • படுத்த 10 நிமிடங்களில் உறங்கிவிட வேண்டும்
 • இடையில் காலை வரை எழுந்திருக்கக் கூடாது
 • தூங்கி எழும் பொழுது அசதி இருக்கக் கூடாது
 • தூங்கி எழுந்ததும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்

முழுமையான கழிவு நீக்கம்

 • தினமும் காலையில் சுலபமாக மலம் கழிக்க வேண்டும்
 • மலம் முழுமையாகச் சுலபமாக வெளியேற வேண்டும்
 • மலம் கழித்த திருப்தி இருக்க வேண்டும்
 • சிறுநீர் சுலபமாக வெளியேற வேண்டும்
 • சிறுநீர் கழித்த திருப்தி இருக்க வேண்டும்

மன அமைதி

 • மனம் அமைதியாக இருத்தல் வேண்டும்
 • எந்த சூழ்நிலையிலும் மனதில் அச்சம், குழப்பம், சோர்வு உருவாகக் கூடாது
 • அளவுக்கு மீறிய மகிழ்ச்சி, கவலை, பயம், துக்கம், கோபம் , தாழ்வு மனப்பான்மை, மன உளைச்சல் உருவாகக் கூடாது.
 • மனம் எப்பொழுதும் சமநிலையில், நிதானத்தில் இருக்க வேண்டும்.

 1. பசி
 2. தாகம்
 3. உறக்கம்
 4. கழிவு நீக்கம்
 5. மன அமைதி

மேலே குறிப்பிட்ட ஐந்தும் குறைந்தாலும், அதிகரித்தாலும், ஆரோக்கிய குறைபாடும், நோய்களும் உருவாக வாய்ப்புண்டு.

ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள 

 • பசி இன்றி உண்பது கூடாது 
 • தாகம் இன்றி தண்ணீர் அருந்தக் கூடாது
 • இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையில் கண்டிப்பாக உறங்க வேண்டும்.
 • தினமும் காலையில் கழிவுகளை வெளியேற்ற வேண்டும்
 • மனதை எப்போதும் அமைதியாகவும் சாந்தமாகவும் காக்க வேண்டும்.


மேலே கூறப்பட்ட ஐந்தும் சரியாகவும், அளவாகவும் இருந்தால், ஒரு மனிதன் நிச்சயமாக ஆரோக்கியமாக இருப்பான், ஆரோக்கியமாக இருக்கிறான்.

நோய்களை கண்டு அச்சப்பட தேவையில்லை . எந்த நோயாக இருந்தாலும், எவ்வளவு கடுமையாக இருந்தாலும். மேலே குறிப்பிடபட்ட வற்றை சீர்செய்தால், நிச்சயமாக குணமாகும்.

உங்கள் உடலை நீங்கள் கவனித்தால், உங்கள் உடல் உங்களை கவனித்துக் கொள்ளும்

சிலர் வாயில் கூட நுழையாது ஒரு பெயரைக் கூறி. இந்த நோய்க்கு என்ன மருத்துவம்?. இதை எவ்வாறு குணப்படுத்துவது என்று கேட்பார்கள்?. அந்த பெயர் எனக்கும் புரியாது, அதை நோயென்று நம்பும் நபருக்கும் புரியாது.

அது என்ன பெயர் என்று சிந்தித்தால். மனிதர்களின் தொந்தரவுகளுக்கு ஆங்கில மருத்துவர்கள் சூட்டும் லத்தீன் மொழி பெயர்கள். அந்த பெயர்களை கேட்டதுமே நோயாளிகள் பயத்தில் பாதி செத்துவிடுவார்கள். உலகம் முழுவதும் இருக்கும் பல மொழிகளை பேசும், ஆங்கில மருத்துவர்கள் அனைவரும் புரிந்து கொள்வதற்காக, ஒரே மாதிரியான பெயரை மனிதர்களின் உறுப்புகளுக்கும், நோய்களுக்கும் சூட்டுகிறார்கள்.

மருத்துவர்களுக்கு எளிதாக புரியவும், மருத்துவத்தை எளிமையாக்கவும் ஒரே மாதிரியான பெயரை சூட்டுகிறார்கள். மருத்துவர்களுக்கு எளிதாக்க உருவாக்கப் பெயரே நோயாளிகளுக்கு அச்சத்தை உருவாக்குகிறது. “Cephalgia” இது எந்த நோயின் பெயர் என்று புரிகிறதா?. ஏதோ ஒரு கொடிய நோயின் பெயர் போல தெரிந்தாலும் இதன் பொருள் தலைவலி. தலைவலி என்று சொல்லுன்போது யாருக்கும் எந்த அச்சமும் உருவாகாது. ஆனால் உங்களுக்கு “செபல்ஜியா” உண்டாகிவிட்டது என்று ஒருவரிடம் சொல்லிப்பாருங்கள். அவரின் கதி அதோகதிதான்.

“Arthralgia” இதுவும் ஏதோ கொடிய நோயின் பெயர் அல்ல, “அற்றல்ஜியா” என்றால் மூட்டுவலி என்று அர்த்தம். மூட்டு வலிக்கிறது என்று ஒருவர் மருத்துவரிடம் சென்றால். மருத்துவர் அவருக்கு எதாவது மருத்துவம் செய்து அனுப்பினால் பாதகமில்லை. ஆனால் பெரும்பாலான மருத்துவர்கள், உங்களுக்கு “அற்றல்ஜியா” உருவாகிவிட்டது என்று நோயாளிகள். எந்த தொந்தரவுக்காக மருத்துவரை நாடி வந்தாரோ, அதே தொந்தரவை லத்தின் மொழியில் மொழிபெயர்த்து சொல்வார். அதை கேட்டவுடனேயே நோயாளியின் மனதில் அச்சம் உருவாகிவிடும்.

நோயாளிகளிடம் ஆங்கில மருத்துவர்கள் கூறும் நோய்களின் பெயர்கள் பெரும்பாலும். உடலின் உறுப்பு அல்லது தொந்தரவுகளுக்கான லத்தின் மொழி பெயராகும். அவை நோய்கள் அல்ல. நோயாளிகள் அந்த பெயர்களை மனதில் சுமந்துக் கொண்டு, அந்த பெயர்களுக்கு வைத்தியம் தேடுகிறார்கள். உடலின் தொந்தரவுகளுக்கு மட்டுமே மருத்துவம் பார்க்க முடியும். பெயர்களுக்கு எந்த வைத்தியமும் செய்ய முடியாது.

ஆங்கில மருத்துவர்கள் உங்கள் உடலின் தொந்தரவுகளுக்கு சூட்டிய பெயர்கள் அனைத்தையும் மறந்துவிட்டு. உங்கள் உடலில் என்ன தொந்தரவு இருக்கிறதோ அதற்கு மட்டும் வைத்தியம் செய்யுங்கள். உதாரணத்துக்கு Thyroid என்பது ஒரு நோயா?. தைரோய்ட் என்பது ஒரு சுரப்பி இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கு தைரோய்ட் இருக்கும். என் உடல் பருமனாக இருக்கிறது, கழுத்து பகுதி வீக்கமாக உள்ளது, பாதம் வலிக்கிறது, கால் வீங்குகிறது என்பதை போன்ற உடல் உபாதைகளை தெரிவித்தால் மருத்துவம் கூறலாம். ஒருவர் எனக்கு தைரோய்ட் இருக்கிறது அதற்கு வைத்தியம் செய்யவேண்டும் என்றால், அவருக்கு என்ன செய்வது?.

உடலின் தொந்தரவுகளை குணப்படுத்த வேண்டுமென்றால், அந்த தொந்தரவுக்கு பெயர் சூட்டும் வேலையை செய்யாமல். அது என்ன தொந்தரவு? எப்போது உருவானது? எவ்வாறு உருவானது? எதனால் உருவானது? அதனால் உடலில் உருவான பாதிப்புகள் எனென்ன என்பனவற்றை சிந்தித்தால் எல்லா நோய்களையும் எளிதாக குணப்படுத்தலாம்.


இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான ஆண்கள், ஆண்மை குறைந்து பல இன்னல்களுக்கு ஆலாகிறார்கள். ஆண்மைக் குறைவு என்றாவுடன் உடல் உறவு கொள்ள இயலாமை என்று புரிந்துகொள்ளக் கூடாது. ஆண்மை என்றால் ஒரு ஆண் மகனின் ஒட்டு மொத்த உடலின் திறனையும் பற்றித்தான் சிந்திக்க வேண்டும். ஆண்மையை வெறும் உடலுறவு தொடர்பான விசயமாக எண்ணக்கூடாது. முதலில் ஆண்களின் ஆரோக்கியம் என்றால் என்னவென்று பார்ப்போம்.

ஆரோக்கியமான ஆணின் அடையாளங்கள்
ஆரோக்கியமான ஆண், உடலளவிலும் மனதளவிலும் தெம்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். அவருக்கு தன் தினசரி வேளைகளை செய்வதில் எந்த சிக்கலும் உண்டாகக்கூடாது. தன்னுடைய அலுவலக வேலைகளையும், தனது சொந்த வேளைகளையும் செய்யும் போது; எந்த தொந்தரவையும், வலியையும், சிக்கல்களையும் அனுபவம் செய்யக் கூடாது. யார் தன் சொந்த வேளைகளை செய்யவே கஷ்டப்படுகிறாரோ, அவர் ஆரோக்கியம் குறைந்தவர்.

ஒரு கூலி தொழிலாளி பத்து மூட்டைகளை தூக்கிவிட்டு, இடுப்பு வலிக்கிறது என்றால் பரவாயில்லை. ஒரு விவசாயிக்கு உழைப்புக்குப் பின் உடல் வலிகள் உண்டானால் பரவாயில்லை. ஒரு வாகன ஓட்டுநர் பல மணி நேரம் வாகனம் ஓட்டுவதால் அசதி, வலி உண்டானால் பரவாயில்லை. ஆனால் வெறும் ஏசி அரையில் வேலை செய்பவர், சும்மா இருப்பவர், சுலபமான வேலைகளை செய்பவர். எந்த உடல் உழைப்புமே செய்யாத சூழ்நிலையில், உடல் உபாதைகளுக்கு ஆளானால், தன் அன்றாட கடமைகள் செய்யவே கஷ்டப்படுகிறார் என்றால், அவர் உடல் ஆரோக்கியம் குறைந்தவர் என்று பொருளாகும்.

பெரும்பாலான ஆண்கள் எதிர்நோக்கும் ஆண்மை கோளாறுகள்.
1. உடலுறவு கொள்ள இயலாமை
2.விறைப்பு தன்மை குறைவு
3. விந்து முந்துதல்
4. உடலுறவில் நாட்டம் இன்மை
5. உடலுறவு கொள்ளும்போது வலிகள்
6. உடலுறவு கொண்டபின், இடுப்பு, கால், முதுகு பகுதிகளில் வலிகள்
7. உடலுறவு கொள்ளும் போது மூச்சுத் திணறல் / இளைப்பு
8. பாதியில் உருப்பு சுருங்குதல்
9. உடலுறவு கொள்ள பயம்
10. ஆண்குறி சிறியதாக இருத்தல்
11. குழந்தையின்மை
12. உடலுறவில் திருப்தி இன்மை
13. மனைவியின் மீது நாட்டமின்மை.
இன்னும் பல....

ஆண்மை கோளாறுகளுக்கு காரணம் என்ன?
அவர் சொன்னார், இவர் சொன்னார், அதில் படித்தேன், இதில் படித்தேன் என்று, நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம், எதை வேண்டுமானாலும் நம்பலாம். ஆனால் உண்மை என்னவென்றால்.

ஆண்மை கோளாறு என்ற ஒன்றே கிடையாது. ஆண்மை இல்லாத ஆண் என்றும் யாருமே கிடையாது. நம்புங்கள்.

ஆனால் என்னால் முழுமையாக உடலுறவில் ஈடுபட முடியவில்லை, எனக்கு விரைப்பு தன்மை ஏற்படவில்லை, என் ஆண்குறி சிறியதாக இருக்கிறது, என நீங்கள் எதையாவது சொல்லலாம். பல ஆண்கள் மேலே சொல்லப்பட்ட தொந்தரவுகளால் அவதிப்படுவது உண்மைதான். ஆனால் இது ஒரு தற்காலிக தொந்தரவே ஒழிய, இது நீடிக்காது. உங்களின் ஆண்மை மீண்டுவிடும், நீங்கள் உடலுறவில் உங்கள் மனைவியுடன் இன்பமாக கண்டிப்பாக இருப்பீர்கள். நம்புங்கள்.

ஆண்மை கோளாறுகள் உருவாக காரணங்கள்
ஆண்மை கோளாறுகள் எப்போது உருவானது என்று கேட்டால் பலர், சர்க்கரை, இரத்த அழுத்தம், இருதயம் தொடர்பான நோய்கள் உருவான பின்பு என்று சொல்வார்கள் அல்லது. புது வேளைக்கு சென்ற பின்பு, கடன் தொல்லைகள் உருவான பிறகு, குடும்ப தகராறுகள், மனைவியுடன் மன கசப்பு, எனப் பல காரணங்கள் சொல்வார்கள். இப்போது நாம் ஆண்மை கோளாறுகள் உருவாக உண்மையான காரணங்களை பார்ப்போம்.

ஆண்மை கோளாறுகள் உருவாக உண்மையான காரணங்கள்
1. மேலே கூறப்பட்ட 13 வகையான கோளாறுகளுக்கும் சொல்லப்படாத மற்ற கோளாறுகளுக்கும், முதன்மைக் காரணமாக இருப்பது மனம். மனதில் ஏற்படும் பயம், கவலை, துக்கம், ஏக்கம், கர்வம், காமம் போன்றவை ஆண்கள் உடலுறவுக் கொள்ள இயலாமல் தடையாக உள்ளது.

ஆண்மை கோளாறு மட்டும் அல்ல, மனிதனுக்கு ஏற்படும் அனைத்து தொந்தரவுகளும் மனதில் இருந்துதான் தொடங்குகின்றன. மனதில் தோன்றும் நல்ல எண்ணங்கள் ஆரோக்கியத்தையும் கெட்ட எண்ணங்கள் ஆரோக்கிய சீர்கேடுகளையும் உருவாக்குகின்றன “மனம்தான் மனிதன்”.

உங்கள் மனதை முதலில் ஆரோக்கியமாகவும், தெளிவாகவும், நடுநிலையாகவும், அமைதியாகவும் வைத்துக்கொள்ளுங்கள். எல்லா நோய்களும் தானாக குணமாகிவிடும். ஆண்மை நிச்சயமாக திரும்பிவிடும் இது உண்மை.

2. நோய்களால் உண்டாகும் ஆண்மை குறைபாடுகள். ஒரு ஆணுக்கு ஏதாவது நோய் உருவானாலோ அல்லது உடல் உறுப்புகள் நோய்வாய் பட்டாலோ ஆண்மை குறைய வாய்ப்புண்டு. சில ஆண்கள் தங்களுக்கு நோய்கள் உள்ளதை உணராமல் கூட இருக்கலாம்.இந்தக் காரணத்தினால் உருவான ஆண்மைக் குறைப்பாடு, நோய்கள் குணமாகும் போது படிப்படியாக சீராகிவிடும்.

3. மருந்துகளால் உருவாகும் ஆண்மைக் குறைப்பாடுகள். பலருக்கு மருந்து மாத்திரைகளின் பக்கவிளைவுகளால் ஆண்மை குறைபாடுகள் உருவாகின்றன. ஆனால் அவர்கள் அந்த ஆண்மை குறைபாடுகள் நோய்களால் உருவானவை என தவறாக எண்ணுகிறார்கள்.

நோய்வாய்ப் பட்டவர்களுக்கு, உதாரணத்துக்கு நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், இருதயக் கோளாறு, இளைப்பு, உடல் உறுப்புகளில் பாதிப்பு உள்ளவர்களுக்கு. இயற்கையாகவே உடலின் இயக்கச் சக்தியும், ஆற்றலும் குறைவாக இருக்கும். இந்தச் சூழ்நிலையில் இரசாயனம் கலந்த மருந்து மாத்திரைகளை உட்க்கொள்ளும் போது, உடலில் இருக்கும் குறைவான சக்திகள் அந்த மருந்து மாத்திரைகளில் உள்ள உடலுக்கு ஒவ்வாத இரசாயனங்களைப் பிரித்து உடலில் இருந்து வெளியேற்ற வீணாய் செலவு செய்யப்படுகின்றன. அதனால் அவர்களுக்கு உடலுறவு கொள்ள போதிய சக்தி இருப்பதில்லை.

இரசாயனம் கலந்த மருந்து மாத்திரைகளை உட்க்கொள்ளும் வறையில் இந்த நிலை தொடரும். இரசாயனம் கலந்த மருந்து மாத்திரைகளை நிறுத்தினால் குணமாகும்.

4. உடலின் சக்தி குறைவினால் உருவாகும் ஆண்மைக் குறைப்பாடுகள், நாம் உண்ணும் உணவு முறையாக சீரணித்து சக்தியாக மாறாமல். உடலில் சக்திக் குறைப்பாடுகள் உருவாகி அதனால் உண்டாகும் ஆண்மைக் கோளாறுகள். சில இறைச்சி வகைகள், சில கடலை வகைகள், சில காய்கறிகள், சில பழங்கள், சில மூலிகைகள் ஆண்மையைக் கூட்டும் என்று சிலர் நம்புகிறார்கள். ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் எதை உட்கொண்டாலும் அதை சக்தியாக மாற்றி உடலுக்கு வழங்குவது உடலின் செரிமான மண்டலம் தான்.

சீரணம் முறையாக நடைபெறாவிட்டால், நீங்கள் அமிர்தத்தை சாப்பிட்டாலும் எந்தப் பயனும் இல்லை. எல்லம் வீண், அவை கழிவாக உடலைவிட்டு வெளியேறிவிடும்.

இன்று பெரும்பாலான ஆண்கள் செரிமானம் சரியாக நடக்காததால் சக்தி குறைந்து ஆண்மையை இழக்கிறார்கள். உங்கள் செரிமான மண்டலம் முறையாகச் செயல்பட்டால், நீங்கள் எதைச் சாப்பிட்டாலும் உங்கள் உடலுக்குத் தேவையான சக்திகளை உடலால் அந்த உணவிலிருந்து உருவாக்க முடியும் நம்புங்கள். மூன்று வேலையும் வெறும் கஞ்சியை குடிப்பவருக்கும் உடலில் அனைத்து சத்துக்களும் இருக்கும். அவரும் ஆரோக்கியமாகத்தான் இருக்கின்றார்.

5. ஆண்மை வீரிய மருந்துகளால் உருவாகும் ஆண்மை கோளாறுகள். சில ஆண்கள், ஆண்மையில் சிறு தோய்வு ஏற்பட்டாலும், ஆண்மை வீரியத்தைக் கூட்டக்கூடிய இரசாயனம் கலந்த மருந்துகளையோ, நாட்டு மருந்துகளையோ நாடி ஓடுகிறார்கள். இது ஒரு கேடான செயலாகும், உடலில் ஏன் ஆண்மைக் குறைவு ஏற்பட்டது என்பதை ஆராய்ந்து அதை சரி செய்யாமல், மருந்துகளை நாடுவது, ஆண்மையை இன்னும் குறைத்து அதை ஒரு நிரந்தர குறையாக மாற்றிவிடும்.

6. மன திருப்தி இன்மையினால் உருவாகும் ஆண்மை கோளாறுகள். சிலருக்கு மனைவியை பிடிக்காமல், அவரின் அழகு போதவில்லை, நிறம் போதவில்லை, உயரம் போதவில்லை, உடல் வாகு பிடிக்கவில்லை, செயல் பிடிக்கவில்லை, குணம் பிடிக்கவில்லை என்று ஏதாவது காரணம் கூறி மனைவியை ஒதுக்குவதாக நினைத்து தன் ஆண்மையைக் குறைத்துக் கொள்கிறார்கள்.
இந்த எண்ணங்கள் மாறும்போது, ஆண்மை தானே திரும்பிவிடும்.

7. மனைவியினால் ஏற்படும் ஆண்மை கோளாறுகள், இது ஒரு மனோவியல் தொடர்பான கோளாறு. மனைவி கணவனை மதிக்காமல் அலட்சியம் செய்யும் போது. கணவனின் குறைகளை, இயலாமையை சுட்டிக்காட்டும் போது ஆண்மைக் கோளாறுகள் உருவாக வாய்ப்புண்டு. மனைவி மீது நாட்டமின்மையும் வெறுப்பும் ஏற்படவும் வாய்ப்புகளுண்டு.

மனைவியை நெருங்கும் போது மனைவியின் மீது கெட்ட வாடை ஏற்பட்டால், கணவனின் நாட்டம் குறைய வாய்ப்புண்டு. உடலுறவு கொள்ளும் போது மனைவி நாட்டம் காட்டாமல், மரக்கட்டைப் போல் கிடந்தாழும் கணவனின் நாட்டம் குறைய வாய்ப்புண்டு. இந்தக் காரணங்களால் ஏற்படும் ஆண்மைக் குறைவுகள் மனைவி தன்னை மாற்றிக்கொள்ளும் போது சரியாகிவிடும்.

கணவனின் உடலுறவு கொள்ளும் திரணை, குறைத்துப் பேசினால். திருப்தி இன்மையை வெளிப்படையாகக் கூறினால், கணவனுக்கு நாட்டம் குறைய வாய்ப்புண்டு. அதனால் மனைவியானவள் உடலுறவில் திருப்தி இல்லாத நிலை ஏற்பட்டாலும் கணவனின் ஆற்றலைப் புகழ்ந்து பேசவேண்டும், திருப்தி ஏற்பட்டதாகப் பாசாங்கு செய்ய வேண்டும், மனைவி கொடுக்கும் இந்த நம்பிக்கை கணவனின் ஆண்மையை மீட்டுத்தரும்.

8. கெட்ட பழக்கங்களால் உருவாகும் ஆண்மை கோளாறுகள், குடிப்பழக்கம், புகையிலை பழக்கம், போதைப் பொருள் உபயோகித்தல், விபச்சாரிகளை நாடுதல், பல பெண்களுடன் உடல் உறவு கொள்ளுதல் போன்ற தீயப் பழக்கங்கள் ஆண்மை கோளாறுகளை உண்டாக்கும். இந்தக் காரணங்களால் உருவாகும் ஆண்மை கோளாறுகள், இந்தத் தீய பழக்கங்களை விட்டவுடன் மெல்லச் சரியாகும், ஆண்மை திரும்பும்.

9. நீலப் படம் பார்ப்பது, காம கதைகளை வாசிப்பது, காமம் தொடர்பான ஆடியோகளை கேட்பது, காமம் தொடர்பான கற்பனைகளில் மூழ்குவது, சிந்திப்பது, காமம் தொடர்பாக தேவையில்லாமல் பேசுவது போன்றவை மிக கேடான ஆண்மை கோளாற்றை ஏற்படுத்த வாய்ப்புண்டு. ஆண்மை கோளாறுகள் மட்டும் இல்லாமல், பல உடல் உருப்புகள் தொடர்பான தொந்தரவுகளையும் உருவாக்க வாய்ப்புண்டு.

இது போன்ற வீணான விஷயங்களை பார்த்துவிட்டு, சுய இன்பத்தில் ஈடுபடுவது, மிக கேடான விழைவுகளை ஏற்படுத்தும். ஆண்மை கோளாறுகள் மட்டுமில்லாமல் சில உள் உருப்புகளையும் சிதைத்துவிடும்.

10. சிறுவயதில் தவறாக வளர்ப்பு. சிறு வயதில் பெற்றோர்களால், கண்ட நேரத்தில் பசியின்றி, தேவையின்றி உணவு கொடுக்கப்பட்டு, தேவையில்லாமல் தண்ணீர் கொடுக்கப்பட்டு, மன அழுத்தம் வரும் அளவுக்குப் படிப்பு படிப்பு என வளர்க்கப் பட்ட பிள்ளைகள், பிற்காலங்களில் ஆண்மை கோளாறுகள் மற்றும் உடல் உறவில் நாட்டமின்மையால் அவதியுற வாய்ப்புண்டு.

பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் ஜாக்கிரதை, அவர்களின் உடல் நலம் உங்கள் கையில் தான் உள்ளது.

ஆண்மை கோளாறு பிரச்சனைகள் தீர
ஆண்மை கோளாறு பிரச்சனைகள் குணமாக. முதலில் உங்களுக்கு எந்த வகையான பிரச்சனை உள்ளது, அது ஏன் உருவானது என்று புரிந்து கொள்ள வேண்டும். பின்பு மேலே கூறப்பட்ட தீர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் உடலை பாதிப்புகளிலிருந்து மாற்றி மகிழ்ச்சியாக வாழுங்கள்.

மேலே குறிப்பிடாத வகையான தொந்தரவுகள் ஏதேனும் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்.


மனம் என்பது என்ன?
மனம் என்பது உடலில் உள்ள ஒரு உறுப்பல்ல மாறாக, மனம் என்பது ஒரு உணர்வு. மனமானது சூட்சம நிலைகளில் செயல்படுகிறது. மனதை உணர முடியுமே ஒழிய வெளிப்படையாக யாராலும் பார்க்கவோ, அதனுடன் தொடர்பு கொள்ளவோ முடியாது.

பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், உணர்ச்சிகள் எனும் ஐந்து அறிவுகளுக்கு அடுத்ததாக, மனம் என்பது ஆறாவது அறிவாகும். முதல் ஐந்து அறிவுகளும், மற்ற உயிரினங்களுக்கு ஒன்று முதல் ஐந்து வரையில், சில விகிதாச்சாரத்தில் வழங்கப்பட்டிருக்கிறது. அவை ஒவ்வொரு உயிரினத்திற்கும் மாறுபடும்.

மனிதர்களுக்கு மட்டுமே ஆறாவது அறிவான மனம் வழங்கப்பட்டிருக்கிறது. சில விலங்குகளுக்கும் மனம் இருந்தாலும் அவற்றின் மனம் மனிதர்களை போன்று முழு ஆற்றலுடன் செயல்படுவது கிடையாது. அதே நேரத்தில் மனிதர்களை போன்று அனைத்து விஷயங்களையும் பதிவு செய்வதும்மில்லை. மனிதர்களுக்கு மட்டுமே மனம் முழுமையாக செயல்படுகிறது.

மனம் எவ்வாறு செயல் புரிகிறது? 
மனமானது மனிதன் பார்க்கும், கேற்கும், நுகரும், சுவைக்கும், உணரும் அனைத்து விஷயங்களையும் பதிவு செய்கிறது. மனிதன் உறக்கத்தில் இருந்தாலும், உணர்ச்சிகளற்று இருந்தாலும், அவ்வளவு ஏன் கோமா நிலையில் இருந்தாலும் கூட மனம் வேலை செய்யும். மனம் பதிவு செய்வது மட்டுமின்றி, அந்த பதிவுகள் தொடர்பான மற்ற விஷயங்களையும் ஆராயும். அதே நேரத்தில் மனதின் பதிவுகள் தொடர்பான மனிதர்களையும், நிகழ்வுகளையும், விஷயங்களையும், தொடர்பு படுத்தவும் செய்யும்.

இன்றும் நாம் பெரியவர்களான பிறகு கூட, சில விஷயங்களை அல்லது சில பொருட்களை பார்க்கும் போதும். சிறு வயதில் இதற்காக ஆசைப்பட்டேன் கிடைக்கவில்லை என்று கூறுவதுண்டு. சில விஷயங்களை செவிமடுக்கும் போது எங்கேயோ கேட்ட ஞாபகம் என்று கூறுவதுண்டு. சில மனிதர்களை பார்க்கும் போதும், சில இடங்களுக்கு செல்லும் போதும், எப்போது சந்தித்த உணர்வுகள் வருவதுண்டு. இவை அனைத்து நம் மனதில் பதிந்த உணர்வுகள்.

மனதின் திறன் 
மனதின் திறனை விளக்க பல கட்டுரைகள் எழுத வேண்டும். அவற்றை பின் நாட்களில் எழுத முயட்சிக்கிறேன். இப்போது நீங்கள் புரிந்துக் கொள்வதட்காக ஒரு உதாரணத்தை சொல்கிறேன்.

சில வருடங்களுக்கு முன்பாக ஒரு பொருளுக்கு ஆசைப்பட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அந்த பொருள் எங்கே தேடியும் கிடைக்கவில்லை, கால போக்கில் மறந்து போனீர்கள். பல வருடங்கள் கழித்து அந்த பொருள் பரிசாகவோ, இனாமாகவோ, கீழே கிடந்தோ, நண்பர்கள், உறவினர்கள் மூலமாக உங்களுக்கு கிடைக்கலாம். அல்லது எதாவது ஒரு கடையிலோ, இடத்திலோ அந்த பொருளை நீங்கள் பார்க்கலாம். இப்போது அந்த பொருளை அடையும் வாய்ப்பும், வசதியும் உங்களிடம் இருக்கலாம்.

பல வருடங்களுக்கு முன்பாக நீங்கள் ஆசைப்பட்டு, கிடைக்காமல் நீங்களே மறந்துப் போன ஒரு விஷயத்தை கூட உங்கள் மனமானது நினைவில் வைத்திருக்கும். அந்த பொருளை தேடிக்கொண்டிருக்கும். வாய்ப்புகள் அமையும் போது உங்களுக்கும் அந்த பொருளுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தும். இது போன்ற நிகழ்வு பலருக்கு பல சந்தர்ப்பங்களில் வெவ்வேறு விதமாக நடந்திருக்கலாம்.

பொருட்கள் மட்டுமின்றி, போக விரும்பும் இடங்கள், சந்திக்க விரும்பும் மனிதர்கள், அடைய துடிக்கும் வெற்றிகள், என அனைத்து விசயங்களையும் மனம் பதிவு செய்து, அதற்கான முயற்சியில் தொடர்ந்து செயல் புரிந்துக் கொண்டே இருக்கும். மனிதர்கள் விழிப்பு நிலையில் இருக்கும் போது, மனதுடன் தொடர்பு கொள்ள முடியாது. அதனால் மனதில் இருக்கும் பதிவுகளும், எண்ணங்களும், சிந்தனைகளும், மனிதர்களுக்கு விளங்குவதில்லை.

மனிதர்களின் மனம் 
மனதை வெறும் பதிவு செய்யும் இயந்திரமாக கடந்து செல்ல முடியாது. அதையும் தண்டி மனம் பல ஆற்றல்களை கொண்டது. மனம் என்பது இறைவன் நமக்களித்த ஒரு அற்புதமான ஆற்றலாகும். மனமானது எல்லா வல்லமைகளையும் பெற்றது. மனதின் உதவியுடன் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். அமைதியான மனம், நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிப்பதுப் போல் அமைதியற்ற மனமானது நிம்மதியை அளித்து மகிழ்ச்சியை சீரழிக்க கூடியது.

மனமானது உடல் ஆரோக்கியம் முதல், உடல் பலம், கல்வி, அறிவு, ஒழுக்கம், செல்வம், நிம்மதி, மகிழ்ச்சி வரையில் அனைத்தையும் நிர்னைக்க கூடியது. சீர் கெட்ட மனம் ஒரு யானையையும் பூனையாகிவிடும். ஆரோக்கியமான மனம் ஒரு பூனையைக் கூட யானை பலம் கொண்டதாக மாற்றிவிடும். ஒரு மனிதனுக்கு கல்வி, அறிவு, செல்வம், பெயர், புகழ், மக்கள் என அனைத்தும் இருந்தாலும், அவன் மனம் மட்டும் சீர்கெட்டுவிட்டால் , அவனை செல்லாக் காசாக்கிவிடும். இவை ஒன்றும் இல்லாதவனாக இருந்தால் கூட மனம் மட்டும் செம்மையானால், இவை அனைத்தையும் தக்க நேரத்தில் அவனுக்கு கிடைக்க செய்யும்.

மனதை சுத்தமாக தீய எண்ணங்களின்றி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை அழகானதாக இருக்கும்.

எவையெல்லாம் நோய்கள்? எவையெல்லாம் நோய்கள் அல்ல என்பதை அறியாமல். உடலில் எந்த தொந்தரவுகள் தோன்றினாலும் அதை தடுக்க வேண்டும், அதை குறைக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இந்த தவறான பழக்கமே பல சிறிய உடலின் தொந்தரவுகள் கொடிய நோய்களாக மாறுவதற்கு காரணமாக இருக்கிறது.

எவையெல்லாம் நோய்கள்
ஒரு மனிதனின் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல், இடைஞ்சல்களை உருவாக்கும் அனைத்தையுமே நோய்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம்.

நோய்கள் ஏய் உருவாகின்றன?
"தீதும் நன்றும் பிறர் தர வாரா".

நம் உடலில் ஒரு தொந்தரவு அல்லது ஒரு நோய் உருவாகிறது என்றால், நாம் செய்த அல்லது செய்து கொண்டிருக்கும் ஏதோ ஒரு தவறான செயல்தான் அதற்கு மூல காரணமாக இருக்கும்.

அது தவறான உணவு பழக்கமாக இருக்காலாம், நீர் அருந்தும் முறையாக இருக்காலாம், வாழ்க்கை முறையாக இருக்காலாம். எந்த காரணமாக இருந்தாலும் அதற்கு நாம்தான் காரணம்.

நோய்கள் உருவானால் எவ்வாறு குணப்படுத்துவது?
நோய்களை குணப்படுத்துவது மிக எளிதான காரியம். “எரிகின்ற கொல்லியை உருவினால் கொதிக்கிறது, தானாக அடங்கிவிடும்” அவ்வளவுதான். நம் அன்றாட வாழ்வில் என்ன என்ன தவறுகள் செய்கிறோம் என்பதை சற்று சிந்தித்துப் பார்த்து, அந்தத் தவறுகளை மாற்றிக் கொண்டால், தொந்தரவுகள் தானாக நீங்கிவிடும்.

எவையெல்லாம் நோய்கள் அல்ல
இது மிக முக்கியமான விஷயம். நோயென்றால் என்னவென்று தெரியாமல், பலர் உடலில் ஏற்படும் அத்தனை மாற்றங்களுக்கும் மருந்துகளை உபயோகித்து உடலை கெடுத்துக் கொள்கிறார்கள். தங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையையும் சீரழிக்கிறார்கள்.

எவையெல்லாம் நோய்களல்ல
1. தும்மல்
2. சலி
3. சலி கட்டி
4. இருமல்
5. காய்ச்சல்
6. வலிகள்
7. புண்கள்
8. அரிப்பு
9. கட்டிகள்
10. வாந்தி
11. வயிற்று போக்கு

இன்னும் பல தொந்தரவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். மேலே குறிப்பிடட எதுவுமே நோயல்ல. இவை சாதாரண கழிவு நீக்கமே. உடலில் தேங்கி இருக்கும் கழிவுகளை உடல் வெளியேற்றுகிறது அவ்வளவுதான். கழிவுதான் உடலை விட்டு வெளியேறுகிறது என்பதை அறியாமல் அவற்றை நோய்கள் என்று பயந்து அவற்றை தடுப்பதுதான் கொடிய நோய்களுக்கு மூல காரணமாக இருக்கிறது.

அவற்றை சற்று விரிவாக பார்ப்போம்.
1. தும்மல் – நம் உடலுக்கு ஒவ்வாத தூசுகள் அல்லது கிருமிகள் சுவாசம் மூலமாக உடலுக்குள் செல்லும் போது, உடல் அதை வெளியேற்ற, தும்மலை உருவாக்குகிறது. அவை வெளியேறும் வரையில் தும்மல் தொடரும்.

2. சலி – தும்மலை மருந்துகளை பயன்படுத்தி தடுத்தால் அல்லது உடலால் கழிவுகளை தும்மல் மூலமாக வெளியேற்ற முடியாத போது. அவை நுரையீரலை சென்றடையும். நுரையீரலில் சேர்ந்த கழிவுகளை சலியாக மாற்றி நுரையீரலிலிருந்து உடல் வெளியேற்றும்.

3. சலி கட்டி – சலியாக கழிவுகளை வெளியேற்ற முடியாத போது. அந்த கழிவுகள் கெட்டி சளியாக மாறும்.

4. இருமல் – அந்த கெட்டி சளியை வெளியேற்ற உருதுணையாக உடல் இருமலை உருவாக்கும்

5. காய்ச்சல் – இது மிக முக்கியமான செய்தி. கெட்டி சளியாக கூட கழிவுகளை உடலால் வெளியேற்ற முடியாதபோது. அந்த கெட்டி சளியை திரவமாக மாற்ற உடலில் காய்ச்சல் தோன்றும். காய்ச்சல் இன்னும் பல நன்மையான காரணங்களுக்காகவும் உருவாகும். அவை, உடலில் நுழைந்த கிருமிகளைக் கொல்ல, உடல் நோய்களை குணப்படுத்த, உடல் உருப்புகளின் வளர்ச்சிக்காக, உடலுக்குச் சக்தியை வழங்க இன்னும் பல நன்மையான காரணங்களுக்காக.

6. வலிகள் – வலிகள் என்பவை ஒரு எச்சரிக்கை மட்டுமே. வலிகள் உண்டானால் உடலில் ஏதோ ஒரு உபாதை உருவாகி இருக்கிறது என்று அர்த்தம். (வலிகள் பற்றிய கட்டுரையை வாசிக்கவும்).

7. புண்கள் – உடலில் உள்ள கழிவுகள் சில காரணங்களுக்காக தோலின் மூலமாக வெளியேறுகிறது.

8. அரிப்பு – சக்தி மற்றும் கழிவு தேக்கம். உடலின் சக்தி ஒடடத்தில் அடைப்பு ஏற்படும் போதும், தோளிலும் உடலிலும் கழிவுகள் அதிகமாக தேங்கும் போதும். அதை உணர்த்தவும் அது சரிசெய்யவும் அரிப்பு உண்டாகலாம்.

9. கட்டிகள் – உடலில் தேங்கி இருக்கும் நாள்பட்ட கழிவுகளை தோல் மூலமாகவும், நேரடியாகவும் உடல் வெளியேற்றுகிறது. இந்த கட்டிகளை தடுத்தால், அந்த கழிவுகள் உடலின் உள்ளேயே கட்டியாக மாறும்.

10. வாந்தி - வயிறு வரையில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவது. வாயால் உட்கொண்ட உணவு அல்லது பொருட்கள் உடலுக்கு ஒவ்வாத போது. உடல் அதனை வாந்தியாக உடலை விட்டு வெளியேற்றும்.

11. வயிற்று போக்கு - உட்கொண்ட உணவு அல்லது பொருட்கள் உடலுக்கு கெடுதியாக இருந்தால். வயிற்றை தாண்டி குடலை அடைந்துவிடடால், அவை வயிற்று போக்காக வெளியேறும்.

மேலே குறிப்பிடப்பட்ட 11 விஷயங்களும் மிக முக்கியமான விஷயங்கள். உடலுக்கு மிகவும் நன்மையான இந்த 11 விஷயங்களை தடுக்கும் பொது, அவற்றை தொந்தவு செய்யும் போது. கழிவுகள் உடலை விட்டு வெளியேற முடியாமல் உடலின் உள்ளேயே தேங்கிவிடும்.

உடலை விட்டும் வெளியேற வேண்டிய இந்த கழிவுகளை, நோயென்று நம்பி மருந்து மாதிரிகளை கொண்டு தடுக்கும்போது. அவை உடலிலேயே தேங்கி, அடைப்பு, சொறி, செய்றங்கு, இளைப்பு, உடல் உறுப்புகலில் பாதிப்பு, உடலுறுப்புகளின் செயல்திறன் இழப்பு, பக்கவாதம், கேன்சர், போன்ற கொடிய நோய்களாக மாறுகிறது.

அதனால் எந்த காரணத்தை கொண்டும். உங்கள் உடலில் இந்த 11 விஷயங்கள் உருவானால் அவற்றை தடுக்காதீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் இவற்றை தடுக்கும் போது, எதிர்காலத்தில் அவர்கள் கொடிய நோயாளிகளாக அவதிபடுவதற்கு நீங்கள் தான் காரணமாக இருப்பீர்கள். உங்கள் பிள்ளைகளை நோயாளிகளாக மாற்றாதீர்கள்.

அச்சத்தை விடுங்கள், ஆசைப்பட்டதை சாப்பிடுங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள்.

அளவோடு இருக்கும் வரையில் எதுவுமே கெடுதல் இல்லை. தைரியமாக இருங்கள், ஆசைப்பட்டதை சாப்பிடுங்கள், எந்தத் தவறுமில்லை. அளவை மட்டும் மீறாதீர்கள். எது அளவு என்றால்?. உங்கள் வயிறு சொல்வதுதான் அளவு. வயிறு நிறைந்து, பசி மாறிவிட்டால், சாப்பிடுவதை உடனே நிறுத்திவிடுங்கள்.

வெள்ளை சீனி அந்த கெடுதலை செய்யும், அஜினமோடோ இந்த கெடுதலை செய்யும், கோக்க கோலா அந்த உறுப்பைக் கெடுக்கும், பெப்சி கோலா இந்த உறுப்பைக் கெடுக்கும் என்று எதற்காகவும் அஞ்சாதீர்கள். அவற்றில் பல அபாயகரமான இரசாயனங்கள் கலந்திருப்பது உண்மைதான். ஆனாலும், உங்கள் உடலும் அதன் எதிர்ப்பு சக்தியும் அதனிலும் வலிமையானது.

மைதாவில் அது இருக்கும், உப்பில் இது இருக்கும் என்று எதற்கும் அஞ்சாதீர்கள். ஆசைப்பட்டதை அளவோடு உண்ணும் போது உடல் அதில் உள்ள ஆபத்தான விசயங்களை சுயமாகவே வெளியேற்றிவிடும், அச்சப்பட தேவையில்லை. ஆனால் பயத்துடன் ஒரு உணவைச் சாப்பிட்டால், உங்கள் பயத்துக்கும், நம்பிக்கைக்கும் தக்கவாறு பக்கவிளைவுகள் உருவாக வாய்ப்புகள் உண்டு.

இன்றைய உலகில் பக்கவிளைவுகள் இல்லாத உணவுகள், இரசாயனம், பூச்சிகொல்லிகள் இல்லாத உணவுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லா உணவிலும் ஏதாவது ஒரு வேதிப்பொருள் கலக்கப்படுகிறது.

அவர் சொன்னார், இவர் சொன்னார், அதில் படித்தேன், இதில் கேட்டேன் என்று அனைத்துக்கும் பயந்துக் கொண்டிருந்தால், எதைத்தான் சாப்பிடுவது?. இன்று விஞ்ஞானிகள் கண்டுப் பிடித்திருக்கிறார்கள், தாய்ப் பாலில் கூட சில இரசாயனங்கள் கலந்து குழந்தைக்கு செல்கிறது என்று. அதற்காக தாய்ப் பால் கொடுப்பதை நிறுத்த முடியுமா?.

ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன் மைதாவில் பென்சொயில், க்ளோரின், பொட்டாசியம் ப்ரொமட், என்சைம், அசெடொன் பெரொசைட், இவ்வாறான பல ஆபத்தான இரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. அவை உடலுக்கு மிகவும் ஆபத்தானவை. சரி இப்போது கொஞ்சம் வித்தியாசமாக சிந்திப்போம், இந்த இரசாயனங்கள் சமைத்த பின் அப்படியே இருக்குமா அல்லது அதன் தன்மைகள் மாறுமா? கண்டிப்பாக மாறிவிடும்

என்னதான் ஆபத்தான இரசாயனமாக இருந்தாலும் அதை சமைக்கும் போது, அந்த இரசாயனம் மற்ற உணவுப் பொருட்களுடன் சேரும் போது அதன் தன்மை கண்டிப்பாக மாறும், அப்படியே இருக்காது.

அதனால் எதற்காகவும் பயப்படாதீர்கள். பசித்தால், அதிக ஆசை உண்டானால், ஆசைப்பட்டதை சாப்பிடுங்கள். அதில் உள்ள கழிவுகளை, ஆபத்தான விசயங்களை உங்கள் உடலே வெளியேற்றிவிடும்.

எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று நான் சொன்னேன் என்பதனால், வேண்டுமென்றே இரசாயனம் கலந்த உணவுகளையும், தீங்கு செய்யக் கூடிய உணவு வகைகளையும் தேடி சாப்பிடாதீர்கள். பசியின் அளவுக்கு, அளவோடு நன்றாக மென்று விழுங்குங்கள்.

எதையும் அளவோடு வைத்துக்கொள்வது மிகவும் நல்லது.

மனிதனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அத்தனை உடல் உறுப்புகளும் அவன் வாழ்நாள் முழுமைக்கும் பயன்படுத்தவே கொடுக்கப் பட்டிருக்கிறது. மனிதன் பிறந்தது முதல் அவன் இறப்பு வரையில் அவன் உடலில் உள்ள அத்தனை உறுப்புகளும் செயல்பட வேண்டும், அவன் பயன்பாட்டுக்கு இருக்க வேண்டும்.

அதனால் வயது அதிகரித்தால், உடலில் சக்திகள் குறையும், உடல் உறுப்புகள் பாதிக்கும், உள்ளுறுப்புகள் செயலிழக்கும் என்பதெல்லாம் வெறும் தவறான கருத்துக்களும், மூட நம்பிக்கைகளும் மட்டுமே.

இந்த கருத்து உண்மையாக இருக்கும் பட்சத்தில், ஏன் சில ஆண்களுக்கு ஆண்மை வீரிய குறைபாடுகள் உண்டாகிறது என்று விளக்க வேண்டும் அல்லவா? அதற்கான காரணங்களை பார்ப்போம்.ஆண்களின் ஆண்மை குறைப்பாடுக்கான காரணங்கள்.

மனம் சமமின்மை
மன சமமின்மையே மிக அதிகமான ஆண்களுக்கு ஆண்மை வீரிய குறைப்பாடுகளை உண்டாக்குகிறது. குடும்பத்திலும், வேலையிடங்களிலும், சமுதாயத்திலும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மனதில் பதிவாகி, ஆண்மையின் வீரியத்தைக் குறைக்கிறது.

மனதின் பதிவுகளில் இருக்கும் கவலை, பயம், எரிச்சல் போன்ற தீய எண்ணங்கள் மிக கேடான ஆண்மை கோளாறுகளை உண்டாக்குகிறது. ஒருவர் மனதினுள் பதிவான பயம் கவலை போன்ற எண்ணங்கள் சம்பந்தப்பட்டவருக்கே தெரியாமல் கூட இருக்கலாம். ஆனால் அந்தப் பதிவுகள் மனதின் உள்ளேயே இருந்துக் கொண்டு சம்பந்தப்பட்டவரின் உடலின் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், கெடுத்துக்கொண்டிருக்கும்.

மனதில் கவலையோ பயமோ இருக்கும் போது மனைவியுடன் கூட வேண்டும் என்ற இச்சை உருவானாலும், மனமும் உடலும் அதற்கு ஒத்துழைக்காது. அதையும் மீறி முயட்சித்தாலும் முழுமையாக ஈடுபடவும் முடியாது. விந்து முந்துதல், பாதியில் சுருங்குதல், மனதில் மற்ற எண்ணங்கள் உருவாக்குதல், பயம், கவலைகள் தோன்றுதல். உடல் வலிகள், சோர்வு போன்றவை ஏற்படலாம்.

எந்தக் கவலையும், பயமும் இல்லாமல், மனதை அமைதியாக வைத்திருப்பதே இதற்கு ஒரே தீர்வு. மனதைப் பற்றிய ஒரு இரகசியம் சொல்கிறேன். இந்த உலகத்திலும் உங்கள் வாழ்க்கையிலும் எல்லாவற்றையும், உங்களால் மாற்றிவிட முடியாது என்ற தெளிவும். இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனி தனியான மனமும் குணமும் இருப்பதால் அவர்கள் ஒவ்வொருவரும் மாறுப்படட குணாதிசியங்களுடன் தான் இருப்பார்கள் என்ற தெளிவும் இருந்தால். உங்களுக்கு எந்தக் கவலையும் பயமும் உண்டாக வாய்ப்பே இல்லை. அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிடும்.

மருந்து மாத்திரைகள்
தலைவலிக்கு உட்க்கொள்ளும் மாத்திரையில் இருந்து, உடலின் எந்த நோய்க்கு எந்த வகையான இரசாயனம் கலந்த மருந்து மாத்திரைகள் உட்கொண்டாலும் அது கண்டிப்பாக ஆண்மையை பாதிக்கும். நீங்கள் சாப்பிடும் மாத்திரையின் அளவு சிறிதாக இருந்தாலும் அது விளைவிக்கும் பக்கவிளைவுகளின் அளவு பெரிதாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

இரசாயனம் கலந்த உணவுகள், பானங்கள், பொருட்கள் மற்றும் மருந்து மாத்திரைகள் பயன்படுத்துபவர்களின் உடல். உடலின் சேரும் இரசாயனங்களை வெளியேற்றுவதிலேயே அதிக உடலின் சக்தியை செலவழித்துவிடுவதால் . உடல் உறவு கொள்ளும் அளவுக்கு உடல் பலமும் மன பலமும் இருப்பதில்லை. அதையும் மீறி முயற்சிக்கும் போது முழுமையாக ஈடுபட பெரும்பாலும் முடிவதில்லை.

உடல் உறுப்புகளின் பலகீனம்
உடலின் உல் உறுப்புகளில் எதாவது ஒரு உறுப்பில் பலகீனம் அல்லது நோய்கள் உருவாகும் போது. அந்த பலகீனத்தை சரி செய்ய உடலின் பெரும்பாலான சக்திகள் செலவழிக்கப்படுகிறது. இது போன்ற நேரங்களில் இயல்பாகவே ஆண்களுக்கு உடலுறவில் நாட்டம் இருக்காது. உடலின் அறிவை பொறுத்தவரையில் உடல் உறவு என்பது மூன்றாம்பட்ச தேவைதான். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால் மற்றும் ஆரோக்கியமாக இருக்கும் வரை மட்டுமே உடலுறவில் நாட்டம் உண்டாகும் .

ஆண்மை குறைப்பாடு, ஒன்றும் பெரிய பிரச்சனை அல்ல. இதைக் குணப்படுத்த எந்த வகையான மருந்து மாத்திரைகளும் தேவையில்லை. உடல் தானாகவே நோய்களையும் பலம் இழந்த உறுப்புகளையும் சரிசெய்த பின்பு, ஆண்மையும் உடலுறவில் நாட்டமும் தானாய் திரும்பிவிடும்.

மருந்துகள் பயன் தராது
ஆண்மை வீரிய குறைவுகள் ஏட்பட்டால் அல்லது உடலுறவில் ஈடுபடும் போது ஏதாவது குறைபாடுகள் ஏற்பட்டால் சிலர், ஆங்கில மற்றும் சித்த மருந்துகளை நோக்கி ஓடுகிறார்கள். ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்; ஆண்மை வீரியத்துக்கு பயன்படுத்தும் அனைத்து மருந்துகளும், மிக கேடான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும், மற்றும் ஆண்மையை இன்னும் பலகீனப்படுத்தும்.

உண்மை காரணத்தை கண்டுபிடித்து அதை சரிசெய்தால் ஒழிய எந்தப் பலகீனத்தையும், உடல் உபாதையையும் குணப்படுத்த எவராலும் முடியாது.