திருக்குறள் கூறும் மருத்துவம்: குறள் 942

குறள் 942:
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது, அற்றது போற்றி உணின்.

உரை
இதற்கு முந்தைய வேளையில் உண்ட உணவு முழுதாக செரித்து விட்டதா என்பதை அறிந்து. இப்போது இருக்கும் பசியின் அளவையும் அறிந்து, பசியின் அளவுக்கு தக்க உணவு உட்கொண்டால். இந்த உடலை பாதுகாக்க எந்த மருந்தும் தேவைப்படாது.

குறள் விளக்கம்
மனிதனின் அனைத்து நோய்களுக்கும் மூல காரணமாக இருப்பது உடலில் ஏற்படும் சக்தி குறைபாடும், உடலில் சேரும் கழிவுகளும் தான். செரிமானம் முறையாக நடக்காதப்பொழுது உண்ட உணவிலிருந்து உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காது. செரிமானம் முறையாக நடக்காததால் செரிமானத்தின் பின் கழிவுகளும் முழுதாக வெளியேறாது.

அதனால்தான் திருவள்ளுவர் கூறுகிறார், முன் வேளையில் உண்ட உணவு செரித்து விட்டதா என்று அறிந்து, பசி உண்டான பின்பு அடுத்த வேளை உணவை உட்கொண்டால் எந்த மருந்தும் தேவைப்படாது என்று, காரணம் பசித்து உண்பவருக்கு உடலில் எந்த உபாதையும் தோன்றாது.

திருவள்ளுவர் மருந்தென கூறுவது நாம் இன்றைய காலகட்டத்தில் பயன்படுத்தும் புட்டியில் அடைத்த, பதப்படுத்திய மற்றும் ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இரசாயன மருந்துகளை அல்ல. அவர் காலத்தால் பயன்பாட்டில் இருந்த, சித்தமருத்துவ மூலிகைகளை. அவர் காலத்தில் மருந்தாக பயன்படுத்தப்பட்டவை, எந்த  பக்கவிளைவுகளும் ஏற்படுத்தாத இலைகள், வேர்கள், பட்டைகள் மற்றும் தாவரங்கள் தான்.

இந்த மருந்துகளை நோயில்லாதவர்கள் உட்கொண்டால் கூட உணவாக செயல்படும், எந்த பாதகமும் உருவாக்காது. இப்படி உணவாக செயல்படக்கூடிய மூலிகைகள் கூட தேவையில்லை, பசித்து மட்டும் உண்டால் போது என்கிறார், திருவள்ளுவர்.No comments:

Post a Comment