திருக்குறள் கூறும் மருத்துவம்: குறள் 943

குறள் 943:
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு, பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

உரை
அன்றாட வாழ்க்கைமுறை, செய்யும் தொழில் இவற்றுக்குத் தேவைப்படும் உடலின் சத்தும் ஆற்றலும் அறிந்து. அந்த உடலின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய உணவை தேர்ந்தெடுத்து உண்பதே, இந்த உடல் நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக இருக்க உதவும் வழியாகும்.

குறள் விளக்கம்
நமக்கு முந்தைய தலைமுறைகளுடன் ஒப்பிடும்போது, இன்றைய தலைமுறை மனிதர்களுக்கு பல நோய்கள் உண்டாவதற்கு காரணம், அவர்கள் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகளை உண்பதுதான். ஒரு மனிதன் தன் உடலுக்குத் தேவையான சத்துக்களையும் அதை தரக்கூடிய உணவுகளையும் அறிந்து, பசியின் அளவுக்கு தக்க உணவு உட்கொண்டால், இந்த உடல் ஆரோக்கியமாக பல காலம் வாழ உதவும் என்கிறார் திருவள்ளுவர்.

தொலைக்காட்சி விளம்பரங்களையும், கடைகளின் அலங்காரத்தையும் பார்த்து ஏமாறாமல், நம் உடலுக்கு போதிய சக்தியை தரக்கூடிய உணவைத் தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும்.No comments:

Post a Comment