Aarokiam

மருந்து மாத்திரையில்லா ஆரோக்கிய வாழ்வின் வழிகாட்டி

ஆரோக்கியம் உடலின் உள்ளேயும் வெளியிலும் இருக்க வேண்டும்


அண்மையில் நடிகை ஸ்ரீதேவி மரணமடைந்து விட்டார். அவர் மரணமடைவதற்கு சில நாட்களுக்கு முன்பு வரையில் எடுத்த புகைப்படங்களை பார்த்தால், பார்ப்பதற்கு ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருந்தார். ஆரோக்கியமாக இருப்பதைப் போல் தெரிந்த அவர் ஏன் திடீரென்று மரணமடைந்தார்?. அவரின் மரணத்துக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன, ஆனாலும்.

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் மூன்று முக்கியமாக விசயங்களை நமக்கு அறிவிக்கிறது. ஒன்று மனிதனின் வயதுக்கும் மரணத்துக்கும் சம்பந்தமில்லை, யாருக்கும் எப்பொழுதும் மரணம் வரலாம். இரண்டு, உடலின் வெளியிலிருந்து நாம் காணும் ஆரோக்கியத்துக்கும் உடலின் உள்ளே இருக்கும் ஆரோக்கியத்துக்கும் சம்பந்தமில்லை. தோல் அழகாக பளபளப்பாக இருக்கலாம் ஆனால் உடலின் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இல்லையென்றால் நோயும் மரணமும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். மூன்றாவது இரசாயனங்கள் எப்பொழுதும் மனிதனுக்கு ஆரோக்கியத்தைத் தராது.

இவை மூன்றும், நம் கண்களின் முன்பும், நம்மைச் சுற்றியும் அடிக்கடி நடக்கும் விஷயங்கள்தான் ஆனாலும் ஒரு பிரபல நடிகைக்கு நடந்தால்தான் நமக்குப் புரிகிறது. அழகாக இருப்பதற்காக கிரீம், எண்ணெய், சோப்பு மற்றும் பல இரசாயனங்களில் இருந்து செய்யப்படும் பொருட்களை பயன்படுத்துவதும். உடலில் ஏதாவது உபாதைகள் ஏற்பட்டால் மருந்து என நம்பி இரசாயனங்களில் இருந்து செய்யப்படும் ஆங்கில மருந்துகளை உண்பதும் நமக்கு வாடிக்கையாகி விட்டது. இவை தவறு என்பதை ஸ்ரீதேவியின் மரணம் நிரூபித்து விட்டது.

ஒரு மனிதனின் உடலில் இருக்கும் அனைத்து வகையான தொந்தரவுகளையும் அவன் முகத்தை மட்டும் பார்த்தே தெரிந்துக் கொள்ளலாம். ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலின் தன்மைகளையும் அவன் உடலின் ஆரோக்கியத்தையும் முகப்பொலிவையும், முகத்தின் தன்மைகளையும் கொண்டு கண்டுகொள்ளலாம். இது இயற்கையின் வடிவமைப்பு. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியை பொய்யாக்கி விட்டார்கள் ஆங்கிலேயர்கள்.


ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்த இரசாயன அழகு சாதனங்கள், இயற்கையின் வடிவமைப்பை மாற்றிவிட்டது. உடலின் உள்ளே ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும் அந்த நபரின் வெளித்தோற்றம் மட்டும் அழகாக இருக்கிறது. இது ஒரு தவறான செயல், காரணம் அந்த சம்பந்தப்பட்ட நபருக்கு, தன் உடலில் உபாதைகள் இருக்கிறது என்பதைக் கண்டுகொள்ள முடியாமல் போகிறது. உதாரணத்திற்கு சில வேளைகளில் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் முகத்தைப் பார்த்து அவர் ஏதோ ஒரு தொந்தரவில் இருக்கிறார் என்று கண்டு கொள்வோம் அல்லது மற்றவர்கள் நம் தொந்தரவுகளை கொண்டுகொள்வார்கள். இரசாயனங்களின் பயன்பாட்டுக்கு பின் இது முடியாமல் போகிறது.

முகத்திலும் உடலிலும் நீங்கள் தேய்க்கும் அனைத்தும் உங்கள் உடலின் உள்ளுறுப்புகளுக்கும் செல்லும் என்பது அப்பட்டமான உண்மை. அதற்கு உதாரணம் வயிறு உப்புசமாக அல்லது வயிற்று வலியாக இருந்தால் வயிற்றில் தைலங்களை தேய்க்கும் போது வயிற்றின் உள்ளே மாற்றங்கள் தெரிகிறது அல்லவா?. கால் அல்லது மூட்டு வலியாக இருக்கும் போது அவற்றின் மேல் பூசும் தைலங்கள், உள்ளே உணரும் வலியின் தன்மைகளை மாற்றுகிறது அல்லவா?. இந்த உதாரணம் போதாதா, நாம் உடலின் மேற்பரப்பில் தேய்க்கும் பொருட்கள் உடலின் உள்ளே மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதற்கு.

அழகுசாதன பொருட்கள்
நாம் அனுதினமும் பயன்படுத்து சோப்பு, சாம்பு, எண்ணெய், மற்றும் வாசனைத் திரவியங்கள் அவற்றை பயன்படுத்துபவர்களின் உடலின் உள்ளே செல்கின்றன. மற்றும் அவை பல கேடுகளை செய்கின்றன. குறிப்பாக பெண்கள் பயன்படுத்தும் சிகப்பழகு கிரீம், பருக்களை போக்கும் கிரீம், மற்றும் மற்ற அழகுசாதன பொருட்கள், பல கொடுமையான இரசாயனங்கள் மூலம் செய்யப்படுகின்றன. இவை பெண்களின் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கின்றன குறிப்பாக வயிற்றையும், தோலையும், மற்றும் கர்ப்பப்பையையும் வெகுவாக பாதிக்கின்றன.

இன்று பல பெண்கள் அனுபவிக்கும் மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கட்டிகள், கர்ப்பப்பை கோளாறுகள், உடல் பருமன், மற்றும் செரிமான கோளாறுகளுக்கும் அவர்கள் பயன்படுத்தும் அழகுசாதன பொருட்கள்தான் முக்கிய காரணமாக இருக்கின்றன.

மறுபடியும் சொல்கிறேன், மனிதன் அனுபவிக்கும் அனைத்து உடல் உபாதைகளுக்கும், நோய்களுக்கும். அவன் பயன்படுத்து இரசாயனங்கள் தான் காரணம். இரசாயன பயன்பாட்டை நிறுத்தும் வரையில் ஆரோக்கியம் திரும்பாது. இரசாயன பயன்பாட்டைத் தவிர்த்து ஆரோக்கியமாக வாழுங்கள்.


No comments:

Post a Comment