சிறுநீரில் கழிவுகள்


உங்கள் சிறுநீர் அழுக்காக இருக்கிறது, உங்கள் சிறுநீரில் கழிவுகள் இருக்கிறது, உங்கள் சிறுநீரில் கிருமிகள் இருக்கிறது, உங்கள் சிறுநீரில் சர்க்கரை அதிகமாக இருக்கிறது. அதனால் உங்கள் உடலின் உள்ளேயே கழிவுகள் இருக்கும், உங்களுக்கு நோய்கள் இருக்கும் என்று யாராவது சொன்னால்.

அவர் உங்களை ஏமாற்றுகிறார் என்று அர்த்தம். ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், சிறுநீர் என்பதே உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும் வழிதான். உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலமாக வெளியேறுவதால், சிறுநீர் அழுக்காகத்தான் இருக்கும்.

அது மட்டுமல்ல சிறுநீரில் கழிவுகள், கிருமிகள் அல்லது சர்க்கரை இருந்தால், அந்த கழிவு அல்லது கிருமி உடலை விட்டு வெளியேறிவிட்டது என்றுதான் பொருள் கொள்ள வேண்டுமே ஒழிய, சிறுநீரில் இருப்பதால் உடலின் உள்ளேயும் இருக்கும் என்று பொருள் கொள்ளக் கூடாது. சிறுநீரில் இருக்கும் கழிவுகள் உடலின் உள்ளேயும் இருக்கும் என்று சொல்வது வியாபாரத்துக்காக கூறப்படும் பொய் மட்டுமே.

சிறுநீர் மூலமாக ஒரு பொருள் உடலை விட்டு வெளியேறி விட்டால், அந்த பொருள் உடலின் உள்ளே இல்லை அல்லது குறைந்த கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக புரிந்துக் கொள்ளவேண்டும்.

ஒரு உதாரணத்துக்காக சொல்கிறேன். உணவு உட்கொண்ட ஒருவர் வாந்தி எடுத்து உண்ட உணவு வெளியேறினால், உடலின் உள்ளே உணவு இருக்கிறது என்று அர்த்தமா அல்லது உணவு வெளியேறி விட்டது என்று அர்த்தமா?.

ஒரு பகுதி வெளியேறி விட்டது என்று சொல்லலாம் அல்லது முழுதாக வெளியேறி விட்டது என்று சொல்லலாம். இவை இரண்டையும் விட்டுவிட்டு வாந்தியில் உணவு வெளியேறியதால், உடலின் உள்ளேயும் உணவு இருக்கும் அல்லது வெளியேறியதை விடவும் அதிகமாக உள்ளே இருக்கும் என்று சொன்னால் அது பொய் என்பது உங்களுக்கே புரிகிறது அல்லவா?.

அதைப்போல்தான் சிறுநீரின் மூலமாக உடலின் உள்ள கழிவுகள் வெளியேறினால். உங்கள் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கிறது, உங்கள் உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றும் தன்மையுடன் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். சிறுநீரை காரணமாக காட்டி யாராவது பயமுறுத்தினால் பயம் கொள்ளாதீர்கள்.

ஒரு மனிதனுக்கு ஏற்படும் பயம் போதும், அவனைக் கொல்வதற்கு. எதற்கும் பயம் கொள்ளாதீர்கள் தைரியமாக இருங்கள்.

No comments:

Post a Comment