ADR எனும் எமன்

ஆங்கிலத்தில் ADR என்று அழைக்கப்படும் இந்தத் தொந்தரவு, இந்த காலகட்டத்தில் பல நோயாளிகளை வாட்டி வதைக்கும் தொந்தரவாக உருவெடுத்திருக்கிறது. உண்மையில் இப்படி ஒரு நோய் உருவானதும், இந்த நோயினால்தான் நாம் எல்லா உடல் உபாதைகளையும் அனுபவிக்கின்றோம் என்பதும் பல நோயாளிகளுக்கு தெரிவதில்லை. மற்றும் தெரியாமல் மறைக்கப் படுகிறது.

பல நோயாளிகள் இன்று அனுபவிக்கும் உடல் உபாதைகள் நோய்களினால் உருவானவை அல்ல மாறாக எ.டி.ஆர்ரினால் உருவாக்கப்பட்டவை.

ADR என்றால் என்ன?
எ.டி.ஆர்ரின் முழு விளக்கம் ADR "An adverse drug reaction" அதாவது எதிர் எதிர் மருந்துகளின் பக்கவிளைவுகள். ஆங்கில மருத்துவர்கள் கொடுக்கும் அனைத்து மருந்துகளும் முழுக்க முழுக்க உடலுக்கு ஒவ்வாத இரசாயனங்களினால் ஆனவை. இது மருந்து கொடுக்கும் மருத்துவர் உட்பட அதை உட்கொள்ளும் நோயாளி வரை அனைவருக்கும் தெரியும். தெரிந்தே நோயாளிகளும் உட்கொள்கிறார்கள் அவர்களின் குழந்தைகளுக்கும் கொடுக்கிறார்கள்.

ஆங்கில மருத்துவத்தின் கேடுகளை பற்றிய விழிப்புணர்வு இல்லாத இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில்தான் ஆங்கில மருத்துவர்கள் கொடுப்பதை (medicine) மருந்து என்று அழைக்கிறார்கள் ஆனால் மேற்கத்திய மற்றும் வளர்ந்த நாடுகளில் இவற்றை (drugs) போதைப் பொருள் என்றே அழைக்கிறார்கள். ஆங்கில மருத்துவர்கள் கொடுப்பது மருந்து அல்ல, நோயாளி நோயை உணராமல் இருக்க கொடுக்கப்படும் போதைப் பொருள் மட்டுமே.

ADR உருவாக்கும் உடல் தொந்தரவுகள்
ADR "An adverse drug reaction" அதாவது எதிர் எதிர் மருந்துகளின் பக்கவிளைவுகள் என்பது, இரண்டு வெவ்வேறு இரசாயண மருந்துகளை ஒரே நேரத்தில் சாப்பிடும் போது ஏற்படும் பக்க விளைவுகள். ஆங்கில மருத்துவம் மட்டுமல்ல, சித்த, யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மருந்துகளுக்கும் இது பொருந்தும்.

உதாரணத்துக்கு ஒரு நீரிழிவு (இனிப்புநீர்) நோயாளியை எடுத்துக்கொள்வோம். அவருக்கு இரத்த அழுத்தமும் அசதியும் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஆங்கில மருத்துவர் அவரின் நீரிழிவுக்கு ஒரு மருத்து கொடுக்கிறார். இரத்த அழுத்தத்துக்கு ஒரு மருந்து கொடுக்கிறார். உடல் தெம்புக்கும் ஒரு மருந்து கொடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

மேலே கூறப்பட்ட எல்லா தொந்தரவுகளுக்கும் மருந்துகள் இரசாயனங்களில் இருந்துதான் உருவாக்கப்படுகின்றன. எல்லா மருந்துகளும் தனி தனியே சோதிக்கப்படுகிறது. உயிருக்கு ஆபத்து இல்லை என்று நிருபிக்கப்பட்டு மனிதர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

எ.டி.ஆரின் - பக்கவிளைவுகள் எங்கு தொடங்குகின்றன?
மேலே உள்ள தொந்தரவுகளுக்கு மருத்துவர் குறைந்தது மூன்று முதல் ஐந்து மருந்துகள் வரையில் கொடுப்பார். அவர் கொடுக்கும் மருந்துகள் அனைத்துமே தனி தனியாக சோதிக்கப் பட்டவை. தனி தனியே சாப்பிடும் போது உயிருக்கு ஆபத்து இல்லை ஆனால் இரண்டு மருந்துகள் என்பது வெவ்வேறு இரசாயன கலவைகளாகும். இரண்டு வெவ்வேறு இரசாயன கலவைகள் ஒன்றாக வயிற்றுக்குல் சென்றால் என்ன நடக்கும்?

இது யாருக்கும் தெரியாது. மருந்து கொடுக்கும் மருத்துவருக்கும் தெரியாது. மருந்து தயாரிக்கும் மருந்து கம்பனிக்கும் தெரியாது.

இரண்டு வெவ்வேறு இரசாயன கட்டமைப்பு கூறுகள் ஒன்றாகச் சேரும்போது அது மூன்றாவதாக ஒரு விளைவை உண்டாக்குகிறது. மூன்று, நான்கு, ஐந்து என மாத்திரைகள் அதிகரிக்கும் போது அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து உருவாக்கும் விளைவுகளை யாராலும் கணிக்க முடியாது.

எ.டி.ஆரின் - நடைமுறை உதாரணம்
தேநீர் தனியாக சாப்பிடும்போது நன்றாக இருக்கும் காப்பியும் தனியாக சாப்பிடும்போது நன்றாக இருக்கும். ஆனால் இரண்டையும் ஒன்று கலந்தால் என்ன ஆகும்?. தேநீர், காப்பியுடன், ஹோர்லிக்ஸ் கலந்தால்? என்ன ஆகும்? அதன் சுவை எப்படி இருக்கும்?. அத்துடன் பூஸ்ட் கலந்தால்? அதில் பெப்சி கலந்தால்?. இந்த ஐந்து பானங்களின் கலவையை சிறிது கற்பனை செய்துபாருங்கள்.

ஐந்து மாத்திரைகளை ஒன்றாக சாப்பிடும் போது இதுதான் உடலின் உள்ளே நடக்கும்.

எ.டி.ஆர் - உருவாக்கும் பக்கவிளைவுகள் எப்படி இருக்கும்?
இந்தக் கேள்விக்கு இந்த உலகத்தில் யாராலும் பதில் சொல்ல முடியாது. அப்படியே சொன்னாலும் அது சரியானதாக இருக்கவும் முடியாது. ஐந்து வகையான மாத்திரை கலவையை பத்து நபர்களுக்கு கொடுத்தால் அதன் விளைவு ஒரே மாதிரியாக இருக்காது, அதற்கு காரணம்; மருந்துகளின் விளைவு என்பது நோயாளியின் நோயின் தன்மை, உடல் வாகு, வாழ்க்கை முறைகள், உணவு முறைகள், மண பக்குவம் இப்படி பல விசயங்களை சார்ந்து மாறுபடும்.

இதனால்தான் சிலருக்கு இரசாயன மருந்துகள் ஒத்து போகின்றன சிலருக்கு கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன. இன்று உலகில் வினோதமான சில நோய்கள் தோன்றுவதற்கும் எ.டி.ஆர் தான் காரணம்.

எ.டி.ஆர் - எச்சரிக்கை
சிலருக்கு ஆங்கில மருந்துகளை உட்கொண்ட பின்பு ஏதாவது தொந்தரவுகள் புதிதாக உருவானால் அல்லது இருகின்ற தொந்தரவு அதிகரித்தால். அது நோயின் தாக்கம் அல்லது அலர்ஜி என்று நம்மை நாமே சமாதானபடுத்திக் கொள்கிறோம் அல்லது மருத்துவர்கள் நம்மை சமாதான படுத்துவார்கள். ஆனால் என் அந்த மாத்திரைகளை உட்கொண்ட பின்பு இந்த புதிய தொந்தரவுகள் உண்டானது என்று சிந்திக்கும் வரையில் நிரந்தர தீர்வு கிடைக்காது.

நோய்களை குணப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு தீராத நோய்களிலும், தீவிர நோய்களிலும் சென்று சிக்கிக்கொள்ளாதீர்கள். பல ஆங்கில மருந்துகளை ஒன்றாக சாப்பிடும்போது மட்டுமின்றி, பல சித்த, யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், போன்ற மருந்துகளை ஒன்றாகச் சாப்பிடும் போதும் இது போன்ற விளைவுகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு.

மருந்து மாத்திரைகள் மட்டுமின்றி, நாம் அனுதினமும் பயன்படுத்தும் உணவுகளில் கலக்கப்படும் இரசாயனங்களும், அழகு சாதன பொருட்களில் கலக்கப்படும் இரசாயனங்களும், மற்றும் நாம் பயன்படுத்தும் மற்ற பொருட்களில் கலக்கப்படும் இரசாயனங்களும் எ.டி.ஆரை உருவாக்க வாய்புகள் உள்ளன. அதனால் இரசாயனங்களின் பயன்பாட்டை தவிர்த்துவிடுங்கள்.

“இயற்கைக்குத் திரும்புங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள்"


No comments:

Post a Comment