Aarokiam

மருந்து மாத்திரையில்லா ஆரோக்கிய வாழ்வின் வழிகாட்டி

அனைத்து நோய்களையும் குணமாக்கும் வழிமுறைகள்

இந்த கட்டுரையை குறிப்பாக நோய் கண்டவர்களுக்கும், மருத்துவம் செய்பவர்களுக்கும் எழுதுகிறேன். பல வருடங்களாக மருத்துவம் செய்தும் நோய்கள் ஏன் குணமாகவில்லை என்று குழம்புவோருக்கும் இதில் பதில் உண்டு. ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ விருப்பப்படுபவர்களும் வாசியுங்கள். கட்டுரையை வாசிக்கும் முன்பாக ஒன்றை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள்.

அனைத்து வகையான நோய்களுக்கும், தொந்தரவுகளுக்கும், உபாதைகளுக்கும், இயலாமைக்கும் நிச்சயமாக ஒரு மருத்துவமோ தீர்வோ இருக்கும். மருத்துவமோ தீர்வோ இல்லாத தொந்தரவுகள் உருவாவதில்லை.

தலைவலி முதல் எயிட்ஸ் வரையில் அனைத்து நோய்களுக்கும் தீர்வு நிச்சயமாக இருக்கும் மருத்துவம் தெரியாதவர்களிடமும், மனித உடல் அமைப்பை அறியாதவர்களிடமும் சிக்கிக்கொண்டு, குணபடுத்த முடியாத நோய்கள் உண்டு என்ற தப்பான எண்ணத்தை வளர்த்துக் கொள்ளாதீர்கள். குறிப்பாக அனைத்து நோய்களுக்கும் ஆங்கில மருத்துவமே தீர்வு என்ற தவறான முடிவுக்கு வராதீர்கள். இன்று பெரும்பாலானோர் தங்கள் நோய்கள் குணமாகாமல் நிரந்தர நோயாளிகளாகவே வாழ்வதற்கு, ஆங்கில மருத்துவமே கெதி என்று நம்புவதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது.

எந்த ஒரு நோய்க்கும் நிரந்தர தீர்வை தேட வேண்டுமே ஒழிய தற்காலிகமான தீர்வை காணக்கூடாது. ஒரு நோயை முழுமையாக குணபடுத்த வேண்டுமென்றால் முதலில் அந்த நோயின் தொடக்கத்தையும், அதன் மூலகாரணத்தையும் அறிந்துகொள்ள வேண்டும். நோயின் மூல காரணம் அறியாமல் யாரும் எந்த நோயையும் குணபடுத்த இயலாது.

நோய்களை பற்றிய சில முக்கிய குறிப்புகள்

1. வலியோ தொந்தரவோ இருக்கும் இடத்தில் தான் நோய் இருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது.

2. தொந்தரவுகள் உண்டான உடன் தான் நோய் தோன்றியது என்று அர்த்தம் இல்லை. சிறுவயது முதலாக சிறுக சிறுக சேர்த்த கழிவுகளே பின்னாளில் உடலில் தொந்தரவாக வெளிப்படுகிறது.

3. உடலில் சேறும் கழிவுகளே உடல் உறுப்புகளின் இயக்கத்தை கட்டுப்படுத்துகிறது.

4. உடலில் சேறும் கழிவுகளே அனைத்து வலிகள், இயலாமை, தொந்தரவுகள் மற்றும் நோய்களுக்கு மூல காரணம்.

5. உடலில் சேறும் கழிவுகளே அனைத்து உபாதைகளுக்கும் காரணமாக இருப்பதால், அந்த கழிவுகளை வெளியேற்றுவதும், புது கழிவுகள் உடலில் சேராமல் தடுப்பதுமே மருத்துவமாக இருக்க வேண்டும்.

6. எப்போதும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோர், உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை முதலில் வெளியேற்ற வேண்டும். மேலும் புது கழிவுகள் உடலில் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

7. நீங்கள் எந்த மருத்துவம் செய்தாலும், ஆங்கில மருத்துவமோ, சித்த மருத்துவமோ, யுனானியோ, ஹோமியோபதியோ, அக்குபஞ்சரோ, எந்த மருத்துவமாக இருந்தாலும். அவர்கள் செய்யும் ஒரே மருத்துவம் உடலில் சேர்ந்த கழிவுகளை வெளியேற்றுவதாக மட்டும்தான் இருக்க வேண்டும்.

8. உடலின் நோய்களை குணப்படுத்த உடலால் மட்டுமே முடியும், எந்த மனிதனாலும் நிச்சயமாக முடியாது.

9. மருத்துவர்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை, கழிவுகளை வெளியேற்ற உடலுக்கு உறுதுணை புரிவது மட்டுமே.

10. கழிவுகளை மட்டும் வெளியேற்றினால் போதும் உடல் தன்னை தானே குணப்படுத்திக் கொள்ளும்.

11. கழிவுகள் உடலில் சேர முக்கிய காரணங்கள் இரண்டு. ஒன்று செரிமானம் கோளாறு மற்றொன்று மலச்சிக்கல் இவை இரண்டையும் ஒழுங்கு படுத்த வேண்டும்.

12. உடலில் கழிவு சேறும் மற்ற காரணங்களை முந்தைய கட்டுரையில் வாசிக்கலாம்.

நோய்களை குணப்படுத்தும் வழிமுறை உதாரணம்
ஒருவர் மூச்சுவிட சிரமபடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய இந்த தொந்தரவுக்கு ஆங்கில மருத்துவர்கள், பல பெயர்கள் சூட்டுவார்கள், ஆனால் உண்மையில் அவருடைய தொந்தரவு என்ன மூச்சு விட சிரமம் அவ்வளவு தானே. இதை எவ்வாறு குணப்படுத்துவது?.

உண்மையில் இந்த நோயாளியை குணப்படுத்துவது மிகச் சுலபம் ஆனால் சில மருத்துவர்கள் அதை செய்யமாட்டார்கள். அந்த நோயாளியை வைத்து பணம் பண்ணுவதற்காக அவரின் நோய் குணமாகாமல் பார்த்துக் கொள்வார்கள், அல்லது அந்த நோயின் தீவிரத்தை அதிகமாக்குவார்கள்.

இந்த நோயாளியை குணபடுத்த என்ன செய்ய வேண்டும். முதலில் மூச்சுவிட உடலுக்கு எந்த உறுப்பு துணைப்புரிகிறது, நுரையீரல். மூச்சுவிட சிரமமாக இருந்தால் அல்லது மூச்சு தொடர்பான தொந்தரவுகள் இருந்தால் நுரையீரலுக்கு மருத்துவம் செய்ய வேண்டுமே ஒழிய. மூச்சுவிட உதவி செய்கிறேன் என்று மூக்குக்கு மருத்துவம் செய்யக் கூடாது.

அவர் நோய் முழுமையாக குணமாக

1. நுரையீரலில் சேர்ந்திருக்கும் கழிவுகளை முதலில் வெளியேற்ற வேண்டும்.

2. எவ்வாறு கழிவுகள் சேர்ந்தது என்பதை கண்டறிந்து; புதுக் கழிவுகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

3. நுரையீரலுக்கு சக்தி அளிக்க வேண்டும்.

4. ஒழுங்கான வாழ்க்கை முறையையும், உணவு முறையையும் கற்றுத்தர வேண்டும்.

5. இப்படிச் செய்தால் உடல் அவர் நோய்களை சுயமாக குணப்படுத்தும். தொந்தரவுகள் நீங்கி ஆரோக்கியம் பெருகும்.

6. அந்த ஆரோக்கியம் நிரந்தரமாக நிலைத்து இருக்கும்.

நோய்களைக் குணப்படுத்துவது எவ்வளவு சுலபம் பார்த்தீர்களா?. எந்த மருத்துவர் இதை செய்கிறாரோ அவர் மட்டுமே உண்மையான மருத்துவர். மூச்சு திணறல் என்றதும் மூக்கில் கேஸ் வைப்பதும் வாயில் ஸ்ப்ரே அடிப்பது எந்த காலத்திலும் நிரந்தரமான தீர்வை தராது. அந்த நோயாளி இறுதிவரையில் நோயாளியாகவே வாழ நேரிடும்.

மருந்துகளை சாப்பிடும் வறை மூச்சு சுலபமாக விடலாம், இந்த ஸ்ப்ரே அடிக்கும் போது மூச்சு சுலபமாக விடலாம் என்றும்; மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதை நிறுத்தினால் உங்கள் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் இல்லை என்றும் மிரட்டி மக்கள் பணத்தை பறிக்கும் கொள்ளை கூட்டத்திடம் சிக்கிக்கொள்ளாதீர்கள்.

மருத்துவம் செய்யும் வழிமுறைகள்
இந்த மருத்துவம் செய்யுங்கள், அந்த மருத்துவம் செய்யாதீர்கள் என்று நான் பரிந்துரைக்க மாட்டேன். உங்கள் உடல், உங்கள் நோய், உங்கள் பணம், உங்கள் விருப்பம். ஆனால் மருத்துவம் செய்யும் வழிமுறைகளை மட்டும் விளக்குகிறேன். மருத்துவரை காண சென்றால்..

1. உங்களுக்கு உருவாகியிருக்கும் தொந்தரவுகளின் மூலகாரணத்தை கேளுங்கள். குழந்தைகளுக்கு பெயர் வைப்பது போல், தொந்தரவுகளுக்கு பெயர்கள் மட்டுமே வைத்து உங்களை ஏமாற்றப் பார்ப்பார்கள். ஏமாராதீர்கள். நோயைப்பற்றிய தெளிவாக விளக்கம் கேளுங்கள், மூல காரணம் கேளுங்கள் கூறவில்லை என்றால் அவரிடம் மருத்துவம் செய்யாதீர்கள், கிளம்பிவிடுங்கள்..

2. உங்கள் தொந்தரவுகளை தவிர்க்கும் வழிமுறைகளை கேளுங்கள். இனிமேல் அந்த தொந்தரவு உண்டாகாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று கேளுங்கள்.

3. அவர்கள் கொடுக்கும் மருந்து / சிகிச்சை என்ன செய்யும், எவ்வாறு நோய்களை குணபடுத்த உதவும் என்று கேளுங்கள்.

4. அவர்கள் கொடுக்கும் மருந்துகளின் / சிகிச்சையின் பக்கவிளைவுகளை தெளிவாக கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.

5. அனைத்துக்கும் மேலாக அந்த மருத்துவர் எவ்வாறு நடந்துகொள்கிறார், எவ்வாறு பேசுகிறார்  என்பதை கவனியுங்கள். உங்களை பயமுறுத்தும் நோக்கத்துடனோ, மரணபயம், நோயின் பயம் உருவாக்கும் பானியிலோ பேசினால், பேச்சை நிறுத்திவிட்டு கிளம்பி விடுங்கள்.

6. நோயாளிகளுக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுப்பவர் மட்டுமே உண்மையான மருத்துவர். பயத்தை உருவாக்குபவன் ஏமாற்றுக்காரன்.

7. அந்த மருத்துவர் மன தைரியத்தை கொடுத்தால், அவர்கள் கொடுக்கும் மருந்து உடலின் கழிவுகளை வெளியேற்றும் என்றால், உடலுக்குத் தெம்பை கொடுக்கும் என்றால். அவர் கொடுக்கும் மருந்து உடலுக்குத் தீங்கு விளைவிக்காது என்றால், தொடர்ந்து வைத்தியம் செய்யுங்கள். இல்லையேல், வேறு நல்ல மருத்துவரை / மருத்துவத்தை நாடுங்கள்.

No comments:

Post a Comment