நோய்களின்றி வாழ கற்றுக்கொள்ளுங்கள்


ஐம்பது வயதுவரையில் நாய் படாத பாடுபட்டு சிறுக சிறுக பணம் சேர்த்து; ஐம்பது வயதில், இல்லாத நோய்களுக்கு மருத்துவம் பார்த்து, மருத்துவர் எனும் வியாபாரிகளிடமும் மருந்து கம்பனிகளிடமும் ஏமாரும் அவலநிலை யாருக்கும் உண்டாகக்கூடாது.

சேர்த்த பணம் முழுவதையும் இழப்பது மட்டுமில்லாமல், சொத்து சுகத்தை விற்று, கடன்பட்டு கடைசியில் நோயாளிகளாகவே பலர் இறக்கின்றனர். இல்லாத நோய்களுக்கு வைத்தியம் பார்த்ததில் சேர்ந்த கடனை அடைக்கமுடியாமல், அவர்களின் பிள்ளைகளும் கடன்காரர்களாகவும், நோயாளிகளாகவும் மாறுகின்றனர்.

இந்த அவலநிலை ஏன் நம் சமூகத்திற்கு உருவானது? அறிவியல், வானியல், மருத்துவம், பொருளியல் என் அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்கிய நம் இனம் இன்று சீர்கெட்டுக் கிடக்க காரணம் என்ன?. இன்று அனைத்துத் துறைகளிலும் நாம் அடுத்தவரை எதிர்பார்த்து நிற்கிறோம்.

குறள் 942:
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது, அற்றது போற்றி உணின்.

உரை
இதற்கு முந்தைய வேளையில் உண்ட உணவு முழுதாக செரித்து விட்டதா என்பதை அறிந்து. இப்போது இருக்கும் பசியின் அளவையும் அறிந்து, பசியின் அளவுக்கு தக்க உணவு உட்கொண்டால். இந்த உடலை பாதுகாக்க எந்த மருந்தும் தேவைப்படாது.

நம் வள்ளுவர் பெருந்தகை சொன்னதைக் கேட்காமல், வெள்ளைக்காரன் சொன்னான், ஜப்பான்காரன் சொன்னான் என்று அடுத்தவன் பின்னால் சென்றதும். நம் முன்னோர்களை முட்டாள்களாக எண்ணியதும் தான் இதற்குக் காரணம்.

திருவள்ளுவர் திருக்குறளில் மருந்து என்ற தலைப்பில் பத்து பாடல்களை எழுதியுள்ளார் அவற்றை புரிந்துகொண்டு பின்பற்றினாலே நோய்களின்றி வாழலாம், எல்லா நோய்களும் தீரும். என்ன இல்லை நம்மிடம்?. உலகின் அனைத்து அறிவும், அனைத்து ஞானமும் தமிழ் மொழியில் தான் உள்ளது, ஆனால் படிக்கத்தான் ஆல் இல்லை. அவற்றைப் படிக்காவிட்டால் இழப்பு நமக்குத்தான்.

பாரம்பரிய மருத்துவங்களான சித்தா, யுனானி, ஆயுர்வேதம், அக்குபங்க்சர், அக்குப்பிரசர், நாட்டுவைத்தியம் என் பல இருக்க, இரசாயனங்களை மருந்தாகப் பயன்படுத்திய பிறகுதான். மனிதனின் நோய்கள் முற்ற ஆரம்பித்து உயிரையும் குடிக்க ஆரம்பித்தன.

இன்று சிறிய நோய்களாக இருக்கும் பல நோய்கள் முற்றி உயிரைக் குடிப்பதற்கு இரசாயன மருந்துகளே காரணம். நோய்கள் உண்டான பின்பு வைத்தியம் தேடாதீர்கள், நோய்களின்றி வாழ கற்றுக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment