உண்மையான நோய்களும் காரணங்களும்

நோய்களையும் அந்த நோய்கள் உண்மையில் உருவாகியிருக்கும் உடல் உறுப்பையும்; முதலில் அறிந்துக் கொண்டால்தான் நோய்களை முழுதாக குணபடுத்த முடியும்.

1. கண் நோய்க்கும், கண் பார்வைக் கோளாருக்கும், கண் தொடர்பான பெரும்பாலான நோய்களுக்கும்; கண்கள் காரணம் இல்லை.

2. சலி, மூக்கடைப்பு, சைனஸ், மூச்சிரைப்புக்கும் மூக்கு காரணம் இல்லை.

3. காது வலி, காதில் கட்டி, காதடைப்பு, கேட்கும் திறன் குறைவுக்கும் காது காரணம் இல்லை.

4. வாய், நாக்கு, உதட்டு புண்களுக்கு காரணம் வாயோ, நாக்கோ அல்ல.

5. தோல்நோய், புண்கள், கட்டிகள், வெண் குஷ்டம், அலர்ஜி, தோலில் அரிப்பு, முடி கொட்டுதல், பொடுகுக்கும் காரணம் தோல் அல்ல.

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து வகையான தொந்தரவுகளும் நோய்கள் கிடையாது. மேலே குறிப்பிடப்பட்ட அனைத்துமே நோய்களுக்கான அறிகுறிகள். உடலின் உள்ளே ஏற்படும் குறைபாடுகளுக்கு உடலின் வெளியில் உடல் காட்டும் அறிகுறிகள் தான் அவை.

இவை உண்மையான நோய்கள் இல்லாததால்தான், எந்த மருத்துவம் செய்தாலும் இந்த நோய்கள் தீர்வதில்லை. இந்த நோய்களுக்கான உண்மைக் காரணம் அறிந்து மருத்துவம் செய்தால் தவிர இவை எந்த காலத்திலும் தீராது. நோயின் மூல காரணம் கூட அறியாத யாராலும் இவற்றை சரிசெய்ய முடியாது.

நோய்கள் பலவாக இருந்தாலும், இவற்றை குணபடுத்த சில எளிய வழிமுறைகள் உள்ளன. அவைதான். தனித்திரு, விழித்திரு, பசித்திரு.

தனித்திரு - கவலை, துக்கம், கர்வம், பயம், எரிச்சல், பொறாமை போன்ற எந்த கெட்ட குணங்களும் மனதை அண்டாமல். நீங்கள் தனி உயிர் என்பதை உணர்ந்து தனித்திருங்கள்.

விழித்திரு - உடலில் என்ன நடக்கிறது, எங்கு எவ்வாறு தொந்தரவுகள் உருவானது என்பதை விழிப்பாக பாருங்கள்.

பசித்திரு - உண்மையான பசி எனும் உணர்வை உணருங்கள். உண்மையான பசி உண்டாகும் வரையில் காத்திருங்கள். நன்றாக பசி உருவான பிறகு பசியின் அளவை அறிந்து சாப்பிடுங்கள். பசி இல்லாமல் அமிர்தமாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

இந்த மூன்றையும் பின்பற்றினால். உலகில் உள்ள எல்லா நோய்களையும் சரி செய்ய முடியும்

No comments:

Post a Comment