Aarokiam

மருந்து மாத்திரையில்லா ஆரோக்கிய வாழ்வின் வழிகாட்டி

வயதானவர்களுக்கு உண்டாகக்கூடிய நோய்கள்

வயதானவர்களுக்கு உண்டாகக் கூடிய  நோய்கள், குறிப்பாக நாற்பது வயதைத் தொட்டவர்களுக்கு உண்டாகக்கூடிய நோய்கள்.

- கண்களின் பார்வை மங்கும்
- காதுகளின் கேட்கும் திறன் குறையும்
- ஞாபக மறதி உண்டாகும்
- பற்கள் கொட்டும்
- வாய் பேச கொளரும்
- மூச்சு விட சிரமம் உண்டாகும்
- சாப்பாடு முறையாக ஜீரணமாகாது
- மலச்சிக்கல் உண்டாகும்
- கை கால்களில் வலிகள் உண்டாகும்
- இடுப்பு வலி உண்டாகும்
- கால் வலி, கால் பாத வலி உண்டாகும்
- நடக்க, நிற்க சிரமமாக இருக்கும்
- சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படும்
- மலம் கழிப்பதில் சிரமங்கள் தோன்றும்
- இரவில் தூக்கம் பிடிக்காது
- சர்க்கரை நோயும், இரத்த கொதிப்பும் உண்டாகும்
- உடலில் பலவகையான நோய்களும் தொந்தரவுகளும் உண்டாகும்.

இவ்வாறு, எந்த பன்னாடையாவது கூறினால். கண்டிப்பாக நம்பாதீர்கள். வயதானால் நோய்கள் உண்டாக வேண்டும் என்று எந்த இயற்கையின் சட்டமும் கிடையாது.

உங்களைப் படைத்தது இறைவன் அல்லது இயற்கை, என்று எதை நீங்கள் நம்பினாலும் உங்களை முழுமையாகப் படைத்திருக்கிறது. உங்கள் உடலில் உள்ள  ஒவ்வொரு உருப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை காலமும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.

அதனால் எவனாவது வயதானால் அந்த நோய் உண்டாகும், வயதானால் இந்த நோய் உண்டாகும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்.

உங்கள் கூடவே வாழும் விலங்குகளை பாருங்கள். மரணம் வரும் வறையில் தன் வேலைகளைத் தானே செய்துகொள்கிறது. எந்த சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை. எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை. எந்த பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் ஜலம் கழிப்பதில்லை. மரணம் அடையும் நாள் வறையில் ஆரோக்கியமாக வாழ்கிறது. சுயமாக தன் வேளைகள் அனைத்தையும் செய்துகொள்கிறது.

மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்கள் உண்டாகும், இயலாமை உண்டாகும் என்று நம்புகிறார்கள். வயது அதிகரிக்க அதிகரிக்க  அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ தொடங்குகிறார்கள்.

நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
- முதுமை என்று எதுவுமே கிடையாது
- நோய்கள் என்று எதுவுமே கிடையாது
- இயலாமை என்று எதுவுமே கிடையாது

எல்லாம் உங்கள் மனதிலும், உங்கள் நம்பிக்கையிலும்  தான் இருக்கிறது. சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள். நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.

வயது அதிகரிக்க அதிகரிக்க முதுமை வரும், முதுமை உண்டானால் நோய்கள் உண்டாகும், முதுமை என்பது வலியும் வேதனையும் நிறைந்தது என்று மக்கள் மனதில் விசத்தை கலக்கிறார்கள். யாரையும் நம்பாதீர்கள்.

மரணம் 
ஒரு மனிதனின் மரணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?. அவன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து. நான் இந்த வாழ்க்கையை முடித்துக்கொண்டு, அடுத்த கட்டத்துக்கு செல்கிறேன். சென்றுவருகிறேன்; மகிழ்ச்சியாக வாழுங்கள் என்று. அவன் குடும்பத்தினரிடம் விடைபெற்றுக் கொண்டு, மகிழ்ச்சியாக தன் உடலை துரக்க வேண்டும்.

யாருடைய மரணமும், சாலைகளிலோ, மரண படுக்கையிலோ, மருத்துவ மனையிலோ ஏற்படக்கூடாது. 

சிந்தனையை மாற்றுங்கள், நான் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும் வாழ்வேன் என்று நம்புங்கள். எல்லா தொந்தரவுகளும் பறந்து போகும்.

வாழும்போது ஆரோக்கியமாக வாழுங்கள் மரணம் வந்தால் மகிழ்ச்சியாக விடைபெற்று செல்லுங்கள். நல்லதே நடக்கும்.

No comments:

Post a Comment