Aarokiam

மருந்து மாத்திரையில்லா ஆரோக்கிய வாழ்வின் வழிகாட்டி

ஏன் உறக்கம் குறைகிறது?

உறக்கம்
இன்றைய காலகட்டத்தில் உறக்கம் தொடர்பான தொந்தரவுகளால் பலர் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். உறங்குவதில் சிரமம், உறக்கமின்மை, உறக்கம் குறைவு, உறக்கத்தின் பகுதியில் விழித்துக்கொள்வது, பகலில் உறக்கம் உண்டாவது, வேலைகளுக்கு இடையில் உறக்கம் வருவது என பலருக்கு பலவகையான தொந்தரவுகள். பெரும்பாலானோர் ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரைக்கும் போதை மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். இன்னும் பலர் உறக்கமின்றி மன நிம்மதியும் இன்றி அவதிபடுகிறார்கள். உறக்கம் தொடர்பான தொந்தரவுகளுக்கு உண்மையான காரணங்களை சிறிது ஆராய்வோம்.

உறக்கம் என்றால் என்ன?
உறக்கம் தொடர்பான தொந்தரவுகளைப் பற்றி அறியும் முன்பு உறக்கம் என்றால் என்னவென்று முதலில் அறிந்துக் கொள்வோம். உறக்கம் என்பது மனித உடலும் மனமும் சக்தியை புதுப்பித்து, சக்தி நிலையை சமன்படுத்தும் ஒரு ஓய்வு நிலையே அன்றி வேறில்லை.

மனிதர்கள் அனைவருக்கும் ஒரே அளவிலான உறக்கத்தின் தேவை இருக்காது. உறக்கத்தின் தேவையும், அளவும் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். ஆங்கில மருத்துவர்கள் கூறும் 8 மணிநேர உறக்கம் என்பது வெறும் கற்பனையே. ஒரு தனி நபருக்கு எவ்வளவு உறக்கம் தேவை என்பது அவர் உடலின் சக்தி நிலையையும், அவரின் உடலின் சக்தி உபயோகத்தையும் பொருத்து மட்டுமே அமையும்.

மனிதர்களின் உறக்கத்தின் கால அளவு
ஒவ்வொரு மனிதர்களுக்கும் தேவைப்படும் உறக்கத்தின் அளவு, அவர் அவர் செய்யும் தொழில், வாழ்க்கை முறை, உணவு முறை, சிந்தனை, மனநிலை, உடலின் உழைப்பு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு மாறுபடும்.

மூட்டைத் தூக்கும் தொழிலாளி, வாகன ஓட்டுநர், ஆசிரியர், வியாபாரி, அலுவலகத்தில் வேலை செய்பவர், இல்லத்தரசி, ஓய்வில் இருக்கும் முதியவர், இவர்கள் அனைவருக்கும் ஒரே அளவிலான உறக்கம் தேவைப்படுமா?.

மேலே குறிப்பிடபட்ட ஒவ்வொருவரின் உடல் உழைப்பும் வெவ்வேறாக இருக்கும், அவர்களின் மனோசக்தி செலவினமும் மாறுபடும், உடலின் சக்தி செலவும் மாறுபடும் அதனால் அவர்களின் உடலின் அசதியும் சக்தி தேவைகளும் நிச்சயமாக மாறுப்படும்.

இவ்வாறு உடலின் மற்றும் மனதின் சக்தி தேவைகள் மாறுபடும் போது அவர்களின் சக்தி உற்பத்தி அளவும் கட்டாயம் மாறுபடும். இதனால் தான் சிலருக்கு அதிகமாக உறக்கம் வருவதும், சிலருக்குக் குறைவாக உறக்கம் வருவதுமாக இருக்கிறது.

ஒருவருக்கு எவ்வளவு சக்தி தேவைப்படுகிறதோ, அல்லது அந்த உடலுக்கு தேவையான சக்தியை முழுமையாக உற்பத்தி செய்ய அந்த உடலுக்கு எவ்வளவு நேரம் தேவைப்படுகிறதோ; அதன் அளவுக்குத்தான் உறக்கம் இருக்கும். எல்லோருக்கும் ஒரே அளவிலான உறங்கும் நேர அளவு இருக்காது.

பயம்
நம் உடலின் தேவைகளுக்கு ஏற்ப உறக்கத்தின் அளவும் தன்மையும் மாறுபடும் என்பதை அறியாதவர்கள், ஆங்கில மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவுக்கு நம்மால் தூங்க முடியவில்லை என்றும்; தனக்கு ஏதாவது நோய்கள் இருக்குமோ என்றும் அஞ்சுகிறார்கள். இந்தப் பயமே அவர்கள் மனதிலும் உடலிலும் புதிய தொந்தரவுகளை உருவாக்குகிறது.

உறக்கத்தில் ஏற்படும் குறைபாடுகள்
குறிப்பாக சிறுவர்களுக்கும், முதியவர்களுக்கு, இல்லத்தரசிகளுக்கு உறங்குவதில் சில சிரமங்களை எதிர்நோக்குவார்கள். இதற்கு காரணம் சிறுவர்களின் உடல் தூங்காமலேயே சக்தியை அதிகமாக உற்பத்தி செய்யும் ஆற்றலுடன் இருக்கும், முதியவர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும், உடல் உழைப்பு குறைவாக இருப்பதால் சக்தி விரயம் இல்லை, அதனால் சக்தி உற்பத்தியின் தேவையும் இல்லை. இதனால் தான் உறக்கத்தின் அளவும் குறைகிறது.

உறக்கம் குறைவாக தேவைப்பட்டால், உடலில் குறைபாடு உள்ளது என்று அர்த்தம் கிடையாது, மாறாக உடல் விரைவாக சக்தியை உற்பத்தி செய்கின்ற ஆற்றலுடன் இருக்கிறது என்று அர்த்தம். குறைவாக உறங்குபவர்கள் தான் ஆரோக்கியமான மனிதர்கள்.

ஆரோக்கியமான உறக்கத்தின் காலஅளவு
நான் முன்பே கூறியது போல, ஒவ்வொரு மனிதனுக்கும் உறக்கத்தின் அளவு மாறுபடும். ஆனால் குறைந்தபட்ச உறக்கத்தின்  அளவு என்று இருக்குமே என்று கேட்டால், ஆம் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் குறைந்த அளவாக 4 மணி நேரங்கள் உறங்கினால் போதுமானது. அதுவும் கண்டிப்பாக இரவு நேர உறக்கமாக இருக்க வேண்டும்.

முறையான உறக்கத்தின் அளவு என்பது அவர் அவர் உடலின் தேவைக்கு ஏற்ப இருக்க வேண்டும். உடல் மற்றும் மனதின் உழைப்பை பொறுத்து உறக்கம் குறைவாகவோ அதிகமாகவோ இருக்கும்.

உறக்கம் தொடர்பான பயம் வேண்டாம்
எனக்கு உறக்கம் பற்றவில்லை, எனக்கு உறக்கம் குறைவாக இருக்கிறது என்று எந்த பயமும் தேவையில்லை. உங்களுக்கு உறக்கம் குறைவாக இருந்தால், உங்கள் உடலுக்கு குறைவான உறக்கத்தின்  அளவே போதுமானதாக உள்ளது என்று அர்த்தம்.

உதாரணத்துக்கு என்னையே எடுத்துக்கொள்வோம். முன்பு  நான் அதிக நேரங்கள் உறங்குவேன். இரவில் 9-10 மணி நேரம் உறங்கி, பின்பு பகலிலும் 2-3 மணி நேரம் உறங்குவேன். ஆனால் இப்போது இரவில் மட்டுமே, 5-6 மணி நேரங்கள் உறங்குகிறேன். எனக்கு என்ன நோய் கண்டுவிட்டதா?, இல்லை என் உடலும் மனமும் இப்பொழுது தான் ஆரோக்கியமான நிலையில் இருக்கிறது. எனக்கு உறக்கம் குறைவாகவே தேவைபடுகிறது என்று அர்த்தம். 5 மணி நேர உறக்கமே என் உடலுக்கும் மனதுக்கும் போதுமானதாக இருக்கிறது.

அதனால் உங்களுக்கு உறக்கம் குறைவாக இருக்கும் பட்சத்தில், பயம் வேண்டாம் உங்கள் உடலுக்கு உறக்கம் குறைவாகவே தேவைபடுகிறது, நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அறிக. ஆங்கில மருத்துவர்கள் கூறுவதை நம்பி பயப்பட வேண்டாம். உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க எவ்வளவு நேர உறக்கம் தேவை என்பதை உங்கள் உடல் நன்றாக அறியும். உங்கள் உடலை தவிரவும் உங்களை முழுமையாக அறிந்தவர் வேறு யாரும் இருக்க முடியாது.

No comments:

Post a Comment