ஆசை மற்றும் பயம் வியாபாரிகளின் மூலதனம்

ஆசை மற்றும் பயம், இவை இரண்டும் தான் மனிதனின் அனைத்து நோய்களுக்கும் துன்பங்களுக்கும் காரணம். மனிதர்களுக்கு ஆசைக்காட்டி அல்லது பயத்தை உருவாக்கி எதை வேண்டுமானாலும் சாதித்துக் கொள்ளலாம்.

இன்றைய வியாபாரிகளின் மூலதனம் என்ன என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நம் ஊர்களில் இருக்கும் சிறு வியாபாரிகளை விட்டுவிடுங்கள். பெரிய மற்றும் சர்வதேச வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை எப்படி நடத்துகிறார்கள் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். ஆசை மற்றும் பயம், இவற்றை வைத்துதான் வியாபாரிகள் தங்கள் வியாபாரங்களை நடத்திவருகின்றனர். மனிதர்களுக்கு ஆசையை உருவாக்குவது அல்லது பயத்தை உருவாக்குவதும், இவை இரண்டுமே கேடுகெட்ட வியாபார தந்திரமாகும்.

ஒரு பொருளை விற்க வேண்டுமா? மிகச் சுலபமான வழி, அந்தப் பொருள் அதை செய்யும், இதை செய்யும் என்று மக்களின் ஆசையைத் தூண்ட வேண்டும் அவ்வளவுதான். அந்த வழி கை கொடுக்கவில்லையா?.

இந்தப் பொருளை பயன்படுத்தவில்லை என்றால் அப்படி ஆகும் இப்படி ஆகும் என்று பயமுறுத்த வேண்டும். ஒரு உதாரணத்துக்காக சொல்கிறேன். நாம் தொலைக்காட்சி பெட்டிகளில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.

எங்கள் பொருளை சாப்பிடுங்கள் ஆரோக்கியமாக வாழலாம். எங்கள் பொருளை பயன்படுத்துங்கள் வெண்மையான சருமம் பெறலாம். எங்கள் பொருளை பயன்படுத்துங்கள் முடி நன்றாக வளாரும். எங்கள் பொருளை பிள்ளைகளுக்குக் கொடுங்கள், நன்றாக வளருவார்கள், புத்திசாலியாக இருப்பார்கள் இப்படி ஏதாவது ஒரு பொய்களை சொல்லி உங்கள் ஆசையைத் தூண்டுவார்கள்.

இன்னொரு பக்கம் அதே தொலைக்காட்சி பெட்டியில், எங்கள் பொருளை பயன்படுத்துங்கள் இல்லை என்றால் உங்களுக்குச் சருமம் நோய்கள் உருவாகும், உங்களைக் கிருமிகள் தாக்கும். எங்கள் கிரிமை பயன்படுத்துங்கள் இல்லை என்றால் புற்றுநோய் உருவாகும். இப்படி ஏதாவது பொய்களை சொல்லி மக்களை பயமுறுத்துவார்கள். வியாபார கூட்டத்தினர்.

இப்போது புரிகிறதா ஏன் தமிழ் நாடு முழுவதும் இலவச தொலைக்காட்சி பெட்டிகள் கொடுத்தார்கள் என்று. நீங்கள் செய்தியோ திரைப்படமோ பார்க்க அல்ல, அதன் இடைவேளைகளில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களைப் பார்க்கத்தான். உங்கள் மனதில் ஆசை அல்லது பயத்தை விதைக்க தொலைக்காட்சி பெட்டிகளை கருவிகளாக பயன்படுத்துகிறார்கள். இதுவும் ஒரு சர்வதேச கம்பனிகளின் சதிதான்.

இப்போது நம் வாழ்க்கையைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போம், மதம் முதல், மருத்துவர்கள் வரை அனைவரும் நமக்கு ஏதாவது ஒரு வகையில் ஆசையை அல்லது பயத்தை தூண்டியே தங்களின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். மனிதர்களிடம் ஆசையும் பயமும் இருக்கும் வறையில் அவர்கள், யாராவது  அடிமையாகவே கடைசிவறையில் இருக்க நேரிடும்.

மருத்துவ உலகத்தில் வியாபாரம்
இன்றைய மருத்துவ உலகத்தைப் பாருங்கள், குறிப்பாக ஆங்கில மருத்துவர்கள் செய்வதை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். ஆங்கில மருத்துவர்களிடம் சென்றால், 80% ஆங்கில மருத்துவர்கள் இரண்டு விசயங்களைக் கண்டிப்பாக செய்வார்கள்.

நோயைப் பற்றிய அல்லது உங்கள் உடலின் தொந்தரவுகள் பற்றிய பயத்தை முதலில் ஏற்படுத்துவார்கள். ஏதாவது உடலின் தொந்தரவுக்காக ஆங்கில மருத்துவரை சென்று சந்தித்தால் அவர் எல்லா சோதனைகளையும் செய்துவிட்டு, உங்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் வேலையைத் தொடங்குவார்.

ஆங்கில மருத்துவத்தின் பயமுறுத்தும் வேலை
அவருக்கு மருத்துவம் செய்ய தெரியவில்லை என்றால் அல்லது குணப்படுத்த முடியவில்லை என்றால் ஒன்றை முதலில் செய்வார். இந்த நோயைக் குணப்படுத்த முடியாது கண்டிப்பாக மரணமடைத்து விடுவீர்கள் என்பார்.  உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் இல்லை என்றால் உயிருக்கே ஆபத்து என்பார். உடலின் உருப்பை வெட்டி எடுக்க வேண்டும் இல்லையேல் உயிருக்கு ஆபத்து என்பார். நான் கொடுக்கும் மருந்து மாத்திரைகளைத் தினமும் சாப்பிட வேண்டும், இல்லையேல் உயிர் போய்விடும் என்பார். இவ்வாறாக ஏதாவது ஒரு பொய்யை சொல்லி பயத்தை முதலில் நோயாளிகளின் மனதில் உருவாக்குவார்கள்.

அவர்கள் செய்யும் மிக கேடான செயல், மனிதனின் மரணத்துக்கு நாள் குறிப்பதுதான். மனிதனின் மரணத்துக்கு நாள் குறிக்க அவர்கள் யார்?. அவர்களுக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்?. ஆங்கில மருத்துவர்களா மனிதர்களைப் படைத்தார்கள்?.

நோயைக் குணப்படுத்த தெரியவில்லை என்றால், உண்மையான மனிதராக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?. ஐயா எனக்கு குணபடுத்த தெரியவில்லை, மற்ற மருத்துவத்தில் முயற்சி செய்யுங்கள் என்று தானே சொல்ல வேண்டும். இதுதானே தர்மம். இதை விட்டுவிட்டு, அவருக்கு தெரியவில்லை என்ற ஒரே காரணத்துக்காக, யாராலும் குணபடுத்த முடியாது நீங்கள் கண்டிப்பாக இறந்துவிடுவீர்கள்  என்பார். நீயாட என்னைப் படைத்தாய்? என் சாவுக்கு நாள் குறிக்க நீ யாரடா? என்று கேள்வி கேட்க திராணியற்றவர்கள். அந்தப் பன்னாடைகள் சொல்வதை நம்பி உயிரை விட்டுவிடுகிறார்கள்.

ஆங்கில மருத்துவர்கள் ஆசையைத் தூண்டுவார்கள்
இந்த இரசாயனத்தைச் சாப்பிடுங்கள், உங்கள் குழந்தை ஆரோக்கியமாக வளாரும், ஆரோக்கியமாக இருக்கும், புத்திசாலியாக இருக்கும் என்று ஏதாவது பொய்களை சொல்லி கர்ப்பம் தரித்த தாய்மார்களுக்கு மருந்துகளை விற்பனை செய்வார்கள்.

கர்ப்பமான தாய்மார்கள் இந்த ஊசியை போட வேண்டும், அந்த ஊசியைப் போடவேண்டும். அப்போதுதான் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும், புத்திசாலியாக இருக்கும் என்று ஆசையைத் தூண்டுவார்கள்.

பக்கவிழைவுகள் இல்லாத ஆங்கில மருந்துகளே இல்லை என்று எல்லா ஆங்கில மருத்துவர்களுக்கும் தெரியும், அதை தெரிந்துகொண்டும் கர்ப்பம் தரித்த தாய்மார்களுக்கு வேண்டுமென்றே சத்து மாத்திரைகள் என்ற பெயரில் இரசாயனங்களை கொடுத்து. ஆரோக்கியம் இல்லாத, நோய்வாய்பட்ட, ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கக் காரணமாக சில ஆங்கில மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு கேடுகெட்ட பணத்தாசை பிடித்தவர்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்.

ஆசையும் பயமும் தான் ஆங்கில மருத்துவத்தின் மூலதனம்
இன்றைய பெரும்பாலான ஆங்கில மருத்துவர்கள், குறிப்பாக பெரிய காப்ரெட் நிறுவனங்கள் நடத்தும் மருத்துவமனைகளில் இந்த பயமுறுத்து வேலையையும், ஆசை காட்டும் வேலையையும் வைத்தே வியாபாரம் நடத்துகிறார்கள்.

பல பெரிய மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு, “தார்கேட்” கொடுக்கப்படுகிறது. இத்தனை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இவ்வளவு மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும். இவ்வளவு சத்து மருந்துகளை விற்பனை செய்ய வேண்டும் என்று. அந்த "தார்கேட்டை" அடையவே ஆரோக்கியமான மனிதர்களையும் நோயாளிகளாக மாற்றுகிறார்கள் சில மருத்துவர்கள்.

ஜாக்கிரதையாக இருங்கள். எந்த ஒரு பெரிய மருத்துவமனைக்கும் செல்லாதீர்கள். நான் உட்பட யார் சொல்வதையும் அப்படியே நம்பாதீர்கள். நன்றாக சிந்தித்து, ஆராய்ந்து செயல்படுங்கள்.

பயம் மற்றும் ஆசை வேண்டாம்
நோய்களைப் பார்த்தும், உடலின் தொந்தரவுகளை பார்த்தும் பயம் கொள்ளாதீர்கள். எல்லா நோய்க்கும் ஒரு தீர்வு நிச்சயமாக இருக்கும்.

பெரிய மருத்துவமனைகளுக்கும் செல்லாதீர்கள். இலவசமாக எந்த உடல் பரிசோதனைக்கும் செல்லாதீர்கள். யார் சொல்வதையும் முழுமையாக நம்பாதீர்கள். தொலைக்காட்சி பெட்டியில் வரும் விளம்பரங்களில் காட்டாப்படும் எதையும் வாங்காதீர்கள்.

சிந்தித்து செயல்படுங்கள்


No comments:

Post a Comment