Aarokiam

மருந்து மாத்திரையில்லா ஆரோக்கிய வாழ்வின் வழிகாட்டி

நொறுங்கத் தின்றால் நூறு வயது

சிலர் என்னிடம் கேட்பார்கள், எதை சாப்பிட்டால் அந்த நோய் குணமாகும்?, எதை சாப்பிட்டால் இந்த நோய் குணமாகும் என்று?. சிலர் கேட்பார்கள். அந்த சத்து உருவாக எதை சாப்பிட வேண்டும்?, இந்த சத்து தேவையென்றால் எதை சாப்பிட வேண்டும்? என்று. இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் என்னுடைய பதில்.

என்ன சாப்பிடலாம் என்று தெரிந்துக் கொள்வதை விட எந்த உணவாக இருந்தாலும், அதை எவ்வாறு முறையாகச் சாப்பிடுவது என்று கற்றுக்கொள்ளுங்கள். எந்த உணவாக இருந்தாலும் அதை முறையாக சாப்பிட்டால், அந்த உணவின் செரிமானத்தின் இறுதியில் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைத்துவிடும்.

இது உண்மையா? ஒவ்வொரு குறிப்பிட்ட பழத்திலும், காய்கறிகளிலும், உணவிலும் ஒரு குறிப்பிட்ட சத்துகள் கிடைக்குமே, அது உடலுக்கு மிக முக்கியமில்லையா என்று நீங்கள் கேட்கலாம். இந்த கேள்விக்கு விடைக்கான ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

உணவில் இருந்து உருவாகும் சத்துக்கள்
தினமும் மூன்று வேளையும் கஞ்சியை மட்டுமே குடிக்கும் ஒரு ஏழைப் பெண்ணுக்கு திருமணம் நடந்தால்; அந்த பெண் கர்ப்பம் தரிப்பாளா?. அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்குமா?. குழந்தை பிறந்ததால்;

1. அந்தக் குழந்தைக்கு கண்கள், காதுகள், வாய் மற்றும் மூக்கு இருக்குமா?
2. அந்தக் குழந்தையின் உடலில் எழும்புகள் இருக்குமா?
3. அந்தக் குழந்தைக்கு தோல் இருக்குமா?
4. அந்தக் குழந்தை வளருமா?
5. அந்தக் குழந்தைக்கு பல் முளைக்குமா?
6. அந்தக் குழந்தைக்கு முடி முளைக்குமா?
7. அந்தக் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்குமா?
8. அந்தக் குழந்தைக்கு எல்லாச் சத்துக்களும் இருக்குமா?
9. அந்த குழந்தையின் உடலில் எல்லா உறுப்புகளும் இருக்குமா?.
10. அந்தக் குழந்தையின் உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் இயங்குமா?

மேலே கேட்கப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில்தான் ஆம். கோடீஸ்வரன் வீட்டுப் பிள்ளைக்கு என்ன என்னவெல்லாம் உடலில் இருக்குமோ, அவை அனைத்தும் அந்த ஏழை வீட்டுப் பிள்ளைக்கும் இருக்கும். சொல்லப்போனால் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்.

எந்தச் சத்துக்கு என்ன சாப்பிடவேண்டும்
மேலே கூறப்பட்ட ஏழைப் பெண் சாப்பிடுவதோ வெறும் கஞ்சி, நவீன மருத்துவத்தின் கூற்றுப்படி கஞ்சியில் இருப்பது வெறும் கார்போஹைட்ரேட். அந்த ஏழைத் தாயின் உடலுக்கு,

1. குழந்தையை வயிற்றில் உருவாக்க
2. குழந்தையை வயிற்றில் வளர்க்க
3. அந்த குழந்தையின் உடலில் உறுப்புகளை உருவாக்க
4. வயிற்றில் இருக்கும் குழந்தையை நோய்களில் இருந்து பாதுகாக்க
தேவைப்படும் சத்துக்கள் அனைத்தும் எங்கிருந்து கிடைத்தது?.

ஒரு குழந்தை உருவாக கல்சியம், மெக்னீசியம், ப்ரோடின், கொழுப்பு, உப்பு, சர்க்கரை, விட்டமின்கள், தாது சத்து எனப் பல சத்துகள் தேவைப்படும் அல்லவா?. அந்தத் தாய்க்கும் குழந்தைக்கும் தேவைப்படும் எல்லாச் சத்துக்களையும் கொடுத்தது யார்? எங்கிருந்து கிடைத்தது?.

அந்தத் தாய் சாப்பிட்ட கஞ்சியில் இருந்தே அந்தத் தாயின் உடல் அனைத்தையும் சுயமாக உருவாக்கிக் கொண்டது. உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், நம்ப முடியாமலும் இருக்கலாம், ஆனால் அதுதான் உண்மை. இன்றும் இந்திய கிராமப்புறங்களிலும் , மற்ற ஏழை நாடுகளிலும், வெறும் கஞ்சியோ, கூழோ குடித்துவிட்டு ஆரோக்கியமாக வாழும் மனிதர்கள் அதிகமானோர் இருக்கிறார்கள்.

உணவை தேர்ந்தெடுக்க தேவையில்லை
எந்த உணவையும் தேர்ந்தெடுக்கவோ ஒதுக்கவோ தேவையில்லை, உங்களுக்கு பிடித்தமானவற்றை சாப்பிடுங்கள் அது போதும். எந்த ஒரு சிறப்பு உணவும் தேவையில்லை. ஆனால் சாப்பிடும் வழிமுறை மட்டும் முக்கியம்.

சாப்பிடும் வழிமுறைகள்
1. பசியின்றி சாப்பிடக் கூடாது.
2. நன்றாகப் பசி வரும் வறை காத்திருக்க வேண்டும்
3. சாப்பிடும் போது அதிகமாகத் தண்ணீர் அருந்தக் கூடாது.
4. பசி அடங்கியதும் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
5. நன்றாகச் சுவைத்து சாப்பிட வேண்டும்
6. உணவின் சுவை மாறும்வரையில் மென்று விழுங்க வேண்டும்.
7. சாப்பாட்டுக்கு முன்பும் பின்பும் அறைமணி நேரத்துக்கு தண்ணீர் அருந்தக் கூடாது.

நீங்கள் உங்கள் உடலுக்கு ஒத்துக்கொள்ளும் எதைச் சாப்பிட்டாலும் உடல் அதிலிருந்து அனைத்துத் தேவையான சத்துக்களையும் உருவாக்கிக்கொள்ளும்.

உணவிலிருந்து உருவாகும் சத்துக்கள்
ஒரு ஏழை விவசாயி வெறும் கஞ்சியை குடித்துவிட்டு, கடுமையாக உழைக்கிறார், கடினமான வேலைகளை செய்கிறார். ஆனால் பணக்காரரோ மிகவும் ஆரோக்கியமான, சத்து நிறைந்த (என்று நம்பும்) உணவுகளை சாப்பிடுகிறார், ஆனால் சாப்பாட்டுக்கு பின்பு வயிற்று பாரமும், அசதியும், தூக்கமும் வந்து அவதிப்படுகிறார்.

இவை இரண்டுக்கும் என்னக் காரணம்?

No comments:

Post a Comment